Eதலைக்குள் ஓடும் டிராபிக்!

Published On:

| By Balaji

ஒரு கப் காபி!

அசையாத மரங்கள், நகராத கட்டடங்கள், படுத்தே கிடக்கும் சாலை. ஆனாலும், மனிதனாக ஓடிக்கொண்டேதான் இருக்க வேண்டியிருக்கிறது. இதை மட்டும் செய்துவிட்டால் இனி இளைப்பாறிவிடலாம் என்னும் நப்பாசையுடன் ஒவ்வொரு நாளும் கடந்துகொண்டிருக்கிறது. வாழ்க்கையோ இளைப்பாறுதலின்றி ஓடிக்கொண்டிருக்கிறது.

டிராபிக் சிக்னலின் ஒழுக்க வரையறை போல, வெள்ளைக் கோட்டின் முன் வந்து நிற்கும் வாகனங்களில் எந்த திசையின் வாகனம் முதலில் செல்ல வேண்டுமோ அவற்றை அனுமதிக்கும் கால நிர்வாகம் போல தலைக்குள்ளும் ஒரு டிராபிக் போலீஸ் தேவைப்படுகிறது.

நழுவி ஓடும் தருணங்களில் எந்தத் தருணம் அழகிய மீன் என்று யாருக்குத் தெரியும்? நேற்று வந்த அதே வானிலையும், இன்று கண்ட அதே கருமேகமும் நாளையும் நாளைக்குப் பின்னும் வாய்ப்பதில்லை.

புத்த துறவி ஒருவரிடம் சீடன் ஒருவன் வினா ஒன்றை எழுப்பினான். “நான் தூரத்திலிருக்கும் மலைக்குச் செல்ல வேண்டுமென நினைக்கிறேன்.”

துறவி, “ஏன்?”

சீடன், “அங்கே தான் மக்கள் வர மாட்டார்கள், யார் தொந்தரவும் இருக்காது, இயற்கையின் ஒலிகளைத் தவிர வேறு சப்தங்கள் இருக்காது. அதனால் நான் மலைக்கு செல்ல விரும்புகிறேன்.”

துறவி, “ஏன்?”

சீடன், “அப்போதுதான் என்னால் கவனச் சிதறலின்றி இருக்க முடியும், என்னுடைய துறவுக்கான பயிற்சியில் முழுமனதாக செயல்பட முடியும். எனவே நான்..”

மீண்டும் துறவி அதே கேள்வியை எழுப்புகிறார்.

சீடன் கோபத்தில், “மலைக்கு சென்றால் அங்கே அமைதியாக இருக்கும். அமைதியான சூழலில் தான் தியானம் செய்ய முடியும் என கற்றறிந்த உங்களுக்குத் தெரியாதா?”

துறவி இப்போது மீண்டும் ஒரு கேள்வியை எழுப்புகிறார். “மலை எப்போதும் அமைதியாகத்தான் இருக்கும். நீ?”

சீடன் மீண்டும் தன் பயற்சிக் கூடத்திற்கே திரும்புகிறான்.

புறச் சூழலால் உள் அமைதியைச் சீர்குலைக்காமல் காப்பாற்றுவதுதான் எக்காலத்திலும் பொருந்தும் ஜென் பயிற்சி. மலை என்பது ஆழ்மனதில் நிரம்பியுள்ள அமைதியின் குறியீடு. அதனாலேயே மனம் அமைதியைத் தேடும்போது மலைகளை மனக் கண்ணிற்குக் கொண்டுவந்துவிடுகிறது. அமைதியான மலை என்பது கற்பிதம் தான், மனம் மலையாக மாறாதவரை.

ஒரு வழிப்போக்கன் மலையை நோக்கிச் சென்றுகொண்டிருக்கையில், பாதசாரி ஒருவன் கேட்கின்றான், “ஏன் எப்போதும் மலைக்கே செல்கிறீர்கள்’?”

வழிப்போக்கன், “ஏனெனில், அங்கே தான் மலை இருக்கிறது.”

**-முகேஷ் சுப்ரமணியம்**

**

மேலும் படிக்க

**

**

[திமுக எம்.பி, எம்.எல்.ஏ.வுக்காக காத்திருந்த முதல்வர்!](https://minnambalam.com/k/2019/06/07/70)

**

**

[ராஜ்நாத் சிங் – அமித் ஷா அதிகார மோதல்: பணிந்த மோடி](https://minnambalam.com/k/2019/06/07/31)

**

**

[டிஜிட்டல் திண்ணை: தமிழர்களைக் கவர குவியும் சாமியார்கள்!](https://minnambalam.com/k/2019/06/07/83)

**

**

[12ஆம் வகுப்புப் பாடத்தில் இடம்பெற்ற சிவாஜி](https://minnambalam.com/k/2019/06/07/16)

**

**

[மகனுக்காக பன்னீரின் பதவிப் பிச்சை: அதிமுக பதில்!](https://minnambalam.com/k/2019/06/07/53)

**

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share