ஜெயம் ரவி, காஜல் அகர்வால் நடிக்கும் கோமாளி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று (மே 18) காலை வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
ஜெயம் ரவியின் நடிப்பில் 24ஆவது படமாக வரவிருக்கும் கோமாளி படத்தை அறிமுக இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் இயக்கியிருக்கிறார். இப்படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடித்துள்ளார். சம்யுக்தா ஹெக்டே மற்றொரு கதாநாயகியாகவும், கே.எஸ்.ரவிக்குமார், யோகி பாபு, கோவை சரளா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளனர்.
தற்போது வெளியாகியுள்ள ஃபர்ஸ்ட் லுக்கில், ஜெயம் ரவி மருத்துவமனையில் குழப்பமான மனநிலையில் உள்ள நோயாளி போல காட்சியளிக்கிறார். அவரது தலையைச் சுற்றி குருவி பறப்பதைப் போல, ட்விட்டர், ஃபேஸ்புக், ஜி மெயில், யூ டியூப், வாட்ஸ் அப் போன்ற சமூக வலைதளங்களின் ‘லோகோ’க்கள் பறக்கின்றன.
படத்தில் வெவ்வேறு காலகட்டங்களில் ஒன்பது வெவ்வேறு தோற்றங்களில் ஜெயம் ரவி தோன்றவுள்ளார். மனிதனின் பரிணாம வளர்ச்சியை கதையின் ஒரு பாகமாக கூறவுள்ளதால் குகைவாசி, ராஜா, ஆங்கிலேயர்களின் அடிமை, 90களின் நகரவாசி போன்ற தோற்றங்களில் நடித்திருக்கிறார் ஜெயம் ரவி.
1964ஆம் ஆண்டு சிவாஜி கணேசன் நவராத்திரி படத்தில் ஒன்பது வேடங்களில் நடித்திருந்தார். அதன் பின், 2008ஆம் ஆண்டு தசாவதாரம் படத்தில் கமல்ஹாசன் பத்து வேடங்களில் தோன்றியுள்ளார். தற்போது அந்த வரிசையில் 11ஆண்டுகள் கழித்து ஒரு நடிகர் அதிக வேடங்களில் நடிக்கும் படம் இதுவாகத்தான் இருக்கும்.
கோமாளி படத்தில் ஜெயம் ரவியின் அடுத்தடுத்த வேடங்கள் இனிவரும் நாட்களில் ஒவ்வொன்றாக வெளியாகும் என படத்தின் இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் கூறியுள்ளார்.
வேல்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு ஹிப் ஹாப் ஆதி இசையமைக்கிறார். ரிச்சர்ட் எம்.நாதன் ஒளிப்பதிவு செய்கிறார், பாடல்களை கபிலன் வைரமுத்து எழுதியுள்ளார்.
.
.
**
மேலும் படிக்க
**
.
**
[விமர்சனம்: மிஸ்டர் லோக்கல்!](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/18/7)
**
.
**
[டிஜிட்டல் திண்ணை: கெஞ்சல், மிரட்டல்- கமல் வெளியிடாத ரகசியத் தகவல்!](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/17/84)
**
.
**
[ஸ்பெயின் ரசிகர்களைக் கவர்ந்த தனுஷ்](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/17/53)
**
.
**
[தினகரனுக்கு எடப்பாடி சொன்ன செய்தி!](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/17/27)
**
.
**
[இன அழிப்புப் போரில் இறந்தோருக்கு அஞ்சலி](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/18/24)
**
.
.
�,”