தமிழின் முன்னணி நடிகையாக வலம்வரும் நயன்தாரா, தொடர்ச்சியாக பல படங்களில் நடித்து வருகிறார். பிஸியாக பல படங்களில் நடித்து வரும் அவர் தற்போது அறிவழகன் இயக்கத்தில் உருவாகவுள்ள புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இதுகுறித்தான உறுதியான தகவலை அறிவழகன் தனது ட்விட்டர் பக்கத்தில் நேற்று (செப்டம்பர் 22) தெரிவித்துள்ளார்.
நயன்தாரா நடித்துள்ள வேலைக்காரன், அறம் ஆகிய படங்கள் ரிலீஸுக்கு தயாராகவுள்ளன. அதோடு, இமைக்கா நொடிகள் படத்தின் டப்பிங் பணிகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மேலும் கொலையுதிர் காலம் படமும், `கோ கோ’ (கோலமாவு கோகிலா) படமும் கைவசம் இருக்கிறது. இந்நிலையில் ஈரம், குற்றம் 23 படங்களை இயக்கிய அறிவழகனின் புதிய படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
சைக்கலாஜிக்கல் த்ரில்லர் பாணி படமாக உருவாகும் இப்படத்தில் நயன்தாராவின் வேடம் ரசிகர்களை பெரிதும் கவரும்” என அறிவழகன் அறிவிப்பின் பக்கத்திலே குறிப்பிட்டுள்ளார். படத்தின் மற்ற நடிகர், நடிகைகள் தேர்வு நடைபெற்று வருகிறது. விரைவில் படப்பிடிப்பு சம்பந்தமான அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கதாநாயகியாக மட்டுமல்லாமல் கதையின் நாயகியாகவும் மாறுபட்ட பாத்திரங்களில் நயன்தாரா நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.�,”