Eசமந்தாவின் ஹாட்ரிக் ஹிட்!

public

சமந்தா தற்போது யூ டர்ன் படத்தின் டப்பிங் பணிகளில் ஈடுபட்டுள்ளார்.

ரங்கஸ்தலம், நடிகையர் திலகம், இரும்புத்திரை என சமந்தா நடிப்பில் இந்த ஆண்டு வெளியான மூன்று படங்களும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன. இதைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிப்பில் சீம ராஜா, விஜய் சேதுபதி நடிப்பில் சூப்பர் டீலக்ஸ் மற்றும் யூ டர்ன் ஆகிய படங்கள் வெளியாகவுள்ளன. சீம ராஜா படத்தின் படப்பிடிப்பு முழுவதுமாக நிறைவடைந்து செப்டம்பர் 13ஆம் தேதி வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சூப்பர் டீலக்ஸ் படத்தின் பணிகளும் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன.

கன்னடத்தில் வெற்றிபெற்ற யூ டர்ன் திரைப்படத்தை அதே பெயரில் தமிழ், தெலுங்கில் உருவாக்கி வருகிறார் இயக்குநர் பவன் குமார். இந்தப் படத்தில் பிரதான கதாபாத்திரத்தில் நடிக்கும் சமந்தா தற்போது அதன் டப்பிங் பணிகளில் கவனம் செலுத்தி வருகிறார். டப்பிங் ஸ்டுடியோவில் எடுக்கப்பட்ட ஒரு வீடியோ வெளியாகியுள்ளது. அதில் சமந்தா பல டேக்குகள் வாங்கும் காட்சி இடம்பெற்றுள்ளது.

பத்திரிக்கையாளராக நடிக்கும் சமந்தா தனது செய்தி நிறுவனத்திற்காகப் புலனாய்வு செய்து செய்தி சேகரிக்கச் செல்லும் போது எதிர்பாராதவிதமாக அந்தப் பிரச்சினைக்குள் சிக்கிக்கொள்கிறார். இதை அடிப்படையாக வைத்தே திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் ஹைதராபாத்தில் காவல் நிலையம் போன்ற செட் அமைக்கப்பட்டுப் படப்பிடிப்பு நடத்தப்பட்டது.

ஆதி, ராகுல் ரவீந்திரன், பூமிகா, நரேன் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் போஸ்டர் விரைவில் வெளியாக உள்ளது.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published.