Eகேம் ஆப் திரோன்ஸ் பார்ட்-2!

Published On:

| By Balaji

பிரபல கேம் ஆஃப் திரோன்ஸ் சீரியஸின் கடைசி சீசன் சில மாதங்களுக்கு முன் முடிவடைந்ததை தொடர்ந்து அடுத்தாக அதன் முந்தைய பாகம் தயாராகவுள்ளது.

ஜார்ஜ் ஆர்.ஆர்.மார்ட்டினால் 1992ஆம் ஆண்டு எழுதப்பட்ட ‘எ சாங் ஆப் ஐஸ் அண்ட் பயர்’ நாவல்களின் தொகுப்பைத் தழுவி உருவாக்கப்பட்ட அமெரிக்க ஃபேண்டஸி ட்ராமா தொடர் கேம் ஆஃப் திரோன்ஸ். எச்பிஓ தொலைக்காட்சி நிறுவனத்திற்காக டேவிட் பெனியாஃப் மற்றும் டி.பி.வேய்ஸ் ஆகியோரால் உருவாக்கப்பட்ட இந்த தொடர் 2011ஆம் ஆண்டிலிருந்து ஒளிபரப்பப்பட்டு வந்து சமீபத்தில் 8ஆவது சீசனில் நிறைவடைந்தது.

முதல் 7 சீசன்களிலும் ரசிகர்களின் முழு வரவேற்பைப் பெற்ற கேம் ஆஃப் திரோன்ஸ், அதன் கடைசி சீசனில் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. ஆனாலும் வெப் சீரியஸ்களில் கிளாசிக்காக கொண்டாடப்படும் இடத்தை பெற்ற இதன் முதல் பாகத்தைத் தொடர்ந்து முந்தைய பாகம்(*Game of thrones prequel*) தயாராகவுள்ளதாக எழுத்தாளர் ஜார்ஜ் ஆர்.ஆர்.மார்ட்டின் தெரிவித்துள்ளார்.

கேம் ஆஃப் திரோன்ஸ் கதை நடக்கும் காலகட்டத்தில் 7 சாம்ராஜ்யங்கள் இருந்தது போல, இதன் முந்தைய பாகங்களின் கதையை கூறும் போது 9 முதல் 12 ராஜ்ஜியங்கள் இருக்கும் எனக் கூறியுள்ளார். மேலும் அதற்கு முன் இருக்கும் காலகட்டத்தை பார்த்தால் 100 குட்டி ராஜ்ஜியங்கள் உள்ளடங்கியிருக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.

கேம் ஆஃப் திரோன்ஸ் முதல் பாகத்திலுள்ள குடும்பங்களில் ஸ்டார்க் குடும்பம் மட்டுமே இந்த புதிய பாகத்தில் இருக்கும். அதே சமயம் அச்சமூட்டும் வைட் வாக்கர்ஸ், மமூத் யானைகள், ஓநாய்களும் இதில் முக்கிய பங்கு வகிக்கவுள்ளது.

மே மாதம் தொடங்கிய இதன் பைலட் மூவிக்கான படப்பிடிப்பு அயர்லாந்து நாட்டில் படமாக்கப்பட்டு வந்தது. தற்காலிகமாக ‘பிளட் நைட்’ எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த புதிய கேம் ஆஃப் திரோன்ஸ் ‘தி லாங்கஸ்ட் நைட்’ எனத் தலைப்பிடப்படலாம் என செய்திகள் வெளியாகின்றன. எப்போது வெளியாகும் யாரெல்லாம் எந்த பாத்திரத்தில் நடிக்கவுள்ளனர் போன்ற முக்கியமான தகவல்கள் இனிவரும் நாட்களில் வெளியாகுமென எதிர்பார்க்கப்படுகிறது.

**

மேலும் படிக்க

**

**[30-45: தினகரனின் அதிரடித் திட்டம்!](https://minnambalam.com/k/2019/07/16/18)**

**[ நியூசிலாந்துக்கு ‘விதி’ செய்த ‘சதி’!](https://minnambalam.com/k/2019/07/15/46)**

**[தயாராகிறது பாகுபலி 3?](https://minnambalam.com/k/2019/07/16/26)**

**[டிஜிட்டல் திண்ணை: உதயநிதியை மாசெக்கள் தேடி வரவேண்டும்- அறிவாலயத்தின் மெசேஜ் !](https://minnambalam.com/k/2019/07/15/72)**

**[அதிமுக தலைவராகிறாரா ரஜினி?](https://minnambalam.com/k/2019/07/15/18)**

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share