இந்தியாவில் விற்பனையாகி வந்த நான்கு குறைந்த விலை ஐபோன்களின் விற்பனை நிறுத்தப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் மிகப்பெரிய பன்னாட்டு நிறுவனமான ஆப்பிள், உலகம் முழுவதிலும் தனது தயாரிப்புகளை ஏற்றுமதி செய்து விற்பனை செய்கிறது. உலகின் இரண்டாவது மிகப்பெரிய ஸ்மார்ட்போன் சந்தையாகத் திகழும் இந்தியாவிலும் ஆப்பிள் ஐபோன்கள் விற்பனை செய்யப்பட்டு வருவதோடு, இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட ஐபோன் எக்ஸ் ஆர் மற்றும் ஐபோன் எக்ஸ் எஸ் ஆகிய ஐபோன்கள் அடுத்த மாதம் விற்பனைக்கு வருகின்றன. இந்நிலையில், குறைந்த விலைகொண்ட நான்கு ஐபோன்களின் விற்பனையை ஆப்பிள் நிறுவனம் இந்தியாவில் நிறுத்தியுள்ளது.
ஐபோன் எஸ்.ஈ., ஐபோன் 6, ஐபோன் 6 பிளஸ், ஐபோன் 6 எஸ் பிளஸ் ஆகிய நான்கு ஐபோன்களின் விற்பனை நிறுத்தப்பட்டுள்ளது. ஃபிளிப்கார்ட், அமேசான் தளங்களில் இந்த ஐபோன்கள் கிடைக்கவில்லை. ஏற்கெனவே ஸ்டாக்கில் இருக்கும் ஐபோன் 6 எஸ் பிளஸ், ஐபோன் 6 மாடல் ஐபோன்கள் மட்டுமே சில ஆன்லைன் தளத்தில் விற்பனைக்கு உள்ளன. போன்களின் விற்பனை எண்ணிக்கையில் கவனம் செலுத்துவதை விட்டுவிட்டு, போன்களின் தரத்தில் கவனம் செலுத்தப்போவதாக ஐபோன் நிறுவனம் தெரிவித்துள்ளது. ஐபோன் எஸ்.ஈ., ஐபோன் 6, ஐபோன் 6 எஸ் பிளஸ், ஐபோன் 6 பிளஸ் ஐபோன்களின் விற்பனை நிறுத்தப்பட்ட பின்னர் துவக்க நிலை ஐபோன்களின் விலை இந்தியாவில் ரூ.8,000 கூடுதலாக இருக்கும்.
இனி ஐபோன் 6 எஸ் தான் இந்தியாவில் துவக்க நிலை ஐபோனாக இருக்கும். இதன் விலை ரூ.29,500 ஆக உள்ளது. இதற்கு முன்னர் துவக்க நிலை ஐபோனாக இருந்த ஐபோன் எஸ்.ஈ. மாடலின் விலை ரூ.21,500 ஆக இருந்தது. எனவே இனி ஐபோன் வாங்க விரும்பும் இந்தியர்கள் குறைந்தது ரூ.29,500 செலவழிக்க வேண்டியிருக்கும்.
**
மேலும் படிக்க
**
**[30-45: தினகரனின் அதிரடித் திட்டம்!](https://minnambalam.com/k/2019/07/16/18)**
**[ நியூசிலாந்துக்கு ‘விதி’ செய்த ‘சதி’!](https://minnambalam.com/k/2019/07/15/46)**
**[தயாராகிறது பாகுபலி 3?](https://minnambalam.com/k/2019/07/16/26)**
**[டிஜிட்டல் திண்ணை: உதயநிதியை மாசெக்கள் தேடி வரவேண்டும்- அறிவாலயத்தின் மெசேஜ் !](https://minnambalam.com/k/2019/07/15/72)**
**[அதிமுக தலைவராகிறாரா ரஜினி?](https://minnambalam.com/k/2019/07/15/18)**
�,”