eகிச்சன் கீர்த்தனா: மட்டன் கீமா ஆப்பம்

Published On:

| By Balaji

yஎளிதில் ஜீரணமாகும், உடலுக்கு வலு சேர்க்கும்!

ஆப்பம் – இலங்கையிலும் தமிழ்நாட்டிலும், குறிப்பாக செட்டிநாட்டில் அதிகமாகச் செய்யப்படும் உணவுகளில் ஒன்று. ஆப்பங்களில் பல வகை இருந்தாலும், இந்த மட்டன் கீமா ஆப்பம், தோசைப் பிரியர்களை ஆப்பப் பிரியர்களாக்கும்.

**எப்படிச் செய்வது?**

தேவை:

தயாராக இருக்கும் ஆப்ப மாவு – தேவையான அளவு (செய்முறை நேற்றைய [பதிவில்](https://minnambalam.com/k/2019/03/13/3))

முட்டை – 1

மட்டன் – 150 கிராம்

இஞ்சி – பூண்டு விழுது – 20 கிராம்

மிளகாய்த்தூள் – 10 கிராம்

சீரகத்தூள் – 5 கிராம்

பொடியாக நறுக்கிய கொத்தமல்லித் தழை – சிறிதளவு

உப்பு – 20 கிராம்

செய்முறை:

மட்டனை நன்கு கழுவி சுத்தம் செய்து, இஞ்சி – பூண்டு விழுது, மிளகாய்த்தூள், சீரகத்தூள், உப்பு சேர்த்துக் கலந்து ஒரு மணி நேரம் ஊற வைக்கவும். இனி, வாணலியில் எண்ணெய் விட்டு, மட்டனைப் பொரித்து, சின்னச் சின்ன துண்டுகளாக நறுக்கிக்கொள்ள வேண்டும்.

அடுப்பைச் சூடாக்கி, ஆப்ப சட்டியை வைத்து துளி எண்ணெய்விட்டு சட்டி முழுவதும் துணி கொண்டு தேய்க்கவும்.

பிறகு, சட்டியில் ஆப்ப மாவை ஊற்றி மிதமான தீயில் இரண்டு நிமிடம் மூடி போட்டு வேகவிட வேண்டும். பிறகு, முட்டையை உடைத்து ஊற்றி சட்டியை ஒரு சுழற்று சுழற்றி, பொரித்த மட்டனை பரவலாகத் தூவி மூடி போட்டு, மேலும் இரண்டு நிமிடம் வேக வைத்து எடுத்தால், மட்டன் கீமா ஆப்பம் ரெடி. நறுக்கிய கொத்தமல்லி தழையைத் தூவி பரிமாறவும்.

**என்ன நன்மை?**

முதியோர், குழந்தைகள், நோயுற்றவர்கள் எளிதில் ஜீரணமாகி, உடனடி பலன் தரும் உணவாக இதை எடுத்துக்கொள்ளலாம்.�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share