eகிச்சன் கீர்த்தனா: பெரிய நெல்லி சட்னி

Published On:

| By Balaji

தினமும் ஒரு நெல்லிக்கனி சாப்பிட்டால் மரணத்தை தள்ளிப்போடலாம் என்று கூறுவதுண்டு. புளிப்பு, இனிப்பு மற்றும் துவர்ப்புச் சுவைகளைக் கொண்ட நெல்லி குளிர்ச்சித் தன்மையானது; கண்களுக்குக் குளிர்ச்சி தரும்; செரிமானத்தைக் தூண்டும்; சிறுநீர் பெருக்கும்; வாயுவை அகற்றும். தற்போது மலிவாகக் கிடைக்கும் பெரிய நெல்லியைக்கொண்டு இந்தச் சட்னியைச் செய்து குடும்பத்தினரின் ஆரோக்கியத்துக்கு அடிதளமிடுங்கள்.

**என்ன தேவை?**

பெரிய நெல்லிக்காய் – 10

உளுத்தம்பருப்பு – 4 டேபிள்ஸ்பூன்

காய்ந்த மிளகாய் – 10 (அல்லது தேவைக்கேற்ப)

பெருங்காயத்தூள் – கால் டீஸ்பூன்

கறிவேப்பிலை – சிறிதளவு

எண்ணெய் – 2 டீஸ்பூன்

உப்பு – தேவைக்கேற்ப

தாளிக்க:

கடுகு, உளுத்தம்பருப்பு – தலா கால் டீஸ்பூன்.

**எப்படிச் செய்வது?**

வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டு, கொட்டை நீக்கிய நெல்லிக்காய்களை சேர்த்து வதக்கவும். இதனுடன் உப்பு தவிர மற்ற எல்லாப் பொருட்களையும் சேர்த்து வதக்கி, உப்பு சேர்த்து, சிறிதளவு தண்ணீர் விட்டு அரைக்கவும். மீதமுள்ள எண்ணெயை சூடாக்கி, கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து, அரைத்த விழுதுடன் சேர்க்கவும்.�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share