�மத்தி, அயிலா, கறி மீன், நங்கு கொளுவா, கிளி மீன், யேரி, என்சீலா, நெய், சூடா போன்ற மீன் வகைகளும், சால்மன், டூனா, மெர்லின் போன்ற பெரிய வகை மீன்களும் இப்போது தாராளமாகக் கிடைக்கின்றன. கறி மீன், கேரளாவில் கிடைக்கும் நன்னீரில் வளரும் ஒருவகை ஸ்பெஷல் மீனாகும். இந்த மீன் கிடைக்கவில்லையென்றால் அதற்கு மாற்றாக வஞ்சிரம், வெளவால், ஊளா போன்ற மீன்களை இதே முறையில் சமைக்கலாம்.
**என்ன தேவை?**
கறி மீன் – 2
வெங்காயம் – ஒன்று
தக்காளி – ஒன்று
இஞ்சி – பூண்டு விழுது – 2 டீஸ்பூன்
மிளகாய்த்தூள் – ஒன்றரை டீஸ்பூன்
தேங்காய்ப்பால் – கால் கப்
தேங்காய் எண்ணெய் – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு
வாழையிலை – 2 துண்டுகள்
**எப்படிச் செய்வது?**
மீனைச் சுத்தம் செய்து அரை டீஸ்பூன் மிளகாய்த்தூள், சிறிதளவு உப்பு தடவி வறுத்து எடுத்துக்கொள்ளவும். வாணலியில் தேங்காய் எண்ணெய் ஊற்றி வெங்காயம் சேர்த்து வதக்கவும். வெங்காயம் வதங்கியதும் இஞ்சி – பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போக வதக்கி, தக்காளி சேர்த்துக் குழைய வதக்கவும். அதில் ஒரு டீஸ்பூன் மிளகாய்த்தூள், தேவையான உப்பு சேர்த்துப் புரட்டி, தேங்காய்ப்பால் ஊற்றி, கெட்டியானதும் இறக்கவும்.
வாழையிலையின் அடிப்பாகத்தை அனலில் காண்பித்து எடுத்து உள்பக்கமாக எண்ணெய் தடவி மசாலாவை அதில் மேல் பரவலாக வைக்கவும். அதன் மேல் வறுத்த மீனை வைக்கவும். மீண்டும் மசாலாவை மேலே வைத்து இலையை மூடி கட்டவும். தவாவில் மீனுடன் வைத்து கட்டிய வாழையிலையை வைத்து மிதமான சூட்டில் நன்கு வேகவைத்து எடுக்கவும்.
[நேற்றைய ரெசிப்பி: மலபார் மீன் ரோஸ்ட்](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2020/03/17/4)�,