காணும் பொங்கலை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள சுற்றுலா தளங்களில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்துள்ளனர். பாதுகாப்பு ஏற்பாடுகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
காணும் பொங்கல் இன்று(ஜனவரி 16 ) கொண்டாடப்படும் நிலையில் சென்னையில் உள்ள சுற்றுலா தளங்களில் ஏராளமான பொதுமக்கள் குவிந்துள்ளனர். மெரினா கடற்கரை, பெசண்ட் நகர் கடற்கரை, வண்டலூர் உயிரியல் பூங்கா, கிண்டி சிறுவர் பூங்கா போன்ற இடங்களில் மக்களின் வருகை அதிகரித்துள்ளது. இதையடுத்து பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளன. மெரினாவில் கடலில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. கண்காணிப்பு பணியில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபட்டுள்ளனர். ஆளில்லா விமானம் மூலமும் கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
**சிறப்பு பேருந்துகள்**
காணும் பொங்கலை முன்னிட்டு சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட்டுள்ளன. அண்ணா சதுக்கம், வண்டலூர் உயிரியல் பூங்கா, கோவளம், மாமல்லபுரம், கிஷ்கிந்தா, குயின்ஸ் லேண்ட், பெசன்ட் நகர், பிராட்வே, தாம்பரம், திருவான்மியூர் மற்றும் சுற்றுலாப் பொருட்காட்சி நடைபெறும் தீவுத்திடல் ஆகிய இடங்களுக்கும் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இச்சிறப்புப் பேருந்துகள் டோல்கேட், ஆவடி, அய்யப்பன்தாங்கல், அடையார், காரனோடை, பெரும்பாக்கம், கேளம்பாக்கம், கண்ணகி நகர், செங்குன்றம், கண்ணதாசன் நகர், கோயம்பேடு, பூவிருந்தவல்லி, வடபழனி, அயனாவரம், பெரம்பூர், வில்லிவாக்கம், சுங்குவார்சத்திரம், நடுவீரப்பட்டு, ஈஞ்சம்பாக்கம், திருப்போரூர், செங்கல்பட்டு, மாதவரம், பட்டாபிராம், கே.கே.நகர், அம்பத்தூர், கிண்டி, தி.நகர் ஆகிய இடங்களில் இருந்து இயக்கப்படுகின்றன.
மேலும், பொங்கல் பண்டிகையை முடித்து சென்னை திரும்பும் தென்மாவட்ட பொதுமக்களின் வசதிக்காக நாளை (ஜனவரி 17 ) அதிகாலை 3.30 மணி முதல் சென்னை புறநகர் பேருந்து நிலையம், பெருங்களத்தூர் மற்றும் சென்ட்ரல் ரயில் நிலையம் ஆகிய இடங்களில் இருந்து பேருந்துகள் இயக்கப் படும் என்றும் போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
இதேபோல் முக்கடல் சங்கமிக்கும் கன்னியாகுமரியிலும் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்துள்ளனர். சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலைக்கு செல்லக் காலை 6 மணி முதல் மாலை 5 மணிவரை இடைவிடாமல் படகுசேவை நடைபெறுகிறது�,