ஒடிசாவில் உள்ள நிலக்கரி நிறுவனத்துக்குச் சொந்தமான லாரி ஒன்றில் அடிப்பட்டு ஆடு ஒன்று உயிரிழந்த நிலையில், மக்கள் நடத்திய போராட்டத்தால் ரூ.2.68 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டிருக்கிறது.
ஒடிசாவின் மகாநதி என்னும் நிலக்கரி உற்பத்தி நிறுவனத்திற்குச் சொந்தமான லாரி ஒன்று தால்செர் நிலக்கரி சுரங்கத்தில் இருந்து நேற்று முன்தினம் நிலக்கரியை ஏற்றி வந்துகொண்டிருந்தது. அப்போது ஆடு ஒன்று லாரியில் அடிப்பட்டு இறந்துள்ளது. இதனால் ஆட்டுக்கு இழப்பீடாக ரூ.60 ஆயிரம் கேட்டு அதன் உரிமையாளரும், அப்பகுதி மக்களும் நிலக்கரி சுரங்கம் இருக்கும் ஜகனாத் பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கின்றனர். ஒன்று திரண்ட கிராம மக்கள் சுரங்கத்திலிருந்து நிலக்கரி எடுத்துச் செல்லும் லாரிகளை வழிமறித்துள்ளனர். காலை 11 மணியளவில் தொடங்கிய போராட்டம் மதியம் 2.30 மணி வரை போராட்டம் நடைபெற்றிருக்கிறது.
இதுகுறித்து தகவலறிந்து வந்த போலீசார் மற்றும் நிலக்கரி நிறுவனத்தின் உயர் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்தே போராட்டம் கைவிடப்பட்டுள்ளது. இதனால் மூன்றை மணி நேரம் நிலக்கரி சுரங்கத்தில் வேலை பாதிக்கப்பட்டிருக்கிறது. இதுகுறித்து மகாநதி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், மக்களின் மூன்றரை மணி நேர போராட்டத்தால் நிலக்கரி போக்குவரத்து தடைப்பட்டது. அதனால் மொத்தம் 2.68 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதோடு, அப்பகுதியில் உள்ள காவல் நிலையத்திலும் இதுகுறித்து புகார் அளிக்கப்பட்டிருக்கிறது உரிய அனுமதி இன்றி போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
�,”