தூத்துக்குடியில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு, எரிபொருள் சிக்கனம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சைக்கிள் பேரணி நடைபெற்றது.
தூத்துக்குடியில் நடைபெற்ற இந்தப் பேரணியில் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கவும் மற்றும் எரிபொருள் பயன்பாட்டில் பொதுமக்கள் சிக்கனமாக இருக்கவும், விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஏராளமான பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் சைக்கிள் பேரணியில் கலந்துகொண்டனர்.
இந்தியன் ஆயில் நிறுவனம் மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பில் நடைபெற்ற சைக்கிள் பேரணியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மகேந்திரன் தொடங்கி வைத்தார். மேலும், மில்லர்புரம் ஆயுதப்படை அலுவலகம் முன்பு தொடங்கிய இந்தப் பேரணி, நகரின் முக்கிய வீதிகள் வழியாக தூத்துக்குடி கடற்கரைச் சாலை வரை சென்று நிறைவடைந்தது.�,