தேவையான பொருள்கள்:
வெண்டைக்காய் – அரை கிலோ
மஞ்சள் தூள் – அரை ஸ்பூன்
சாம்பார் பொடி – 1 ஸ்பூன்
சோம்பு – அரை ஸ்பூன்
எண்ணெய் – 2 மேசைக்கரண்டி
பொடியாக அரிந்த வெங்காயம் – 1 கப்
பொடியாக அரிந்த தக்காளி – 1 கப்
மெலியதாக சீவிய பூண்டு – 5
பொடியாக அரிந்த கொத்தமல்லி – 3 மேசைக்கரண்டி
தேவையான உப்பு
செய்முறை:
வெண்டைக்காயைப் பொடியாக அரியவும். வாணலியில் அரிந்த வெண்டைக்காயைப் போட்டுச் சூடாக்கவும். சிறிது சிறிதாக எண்ணெய்விட்டு வதக்கவும். மஞ்சள் தூள், சாம்பார் பொடி சேர்த்து கிளறவும். பின் வெங்காயம், தக்காளி, கொத்தமல்லி, பூண்டு இவற்றைச் சிறிது சிறிது இடைவெளிவிட்டுச் சேர்த்து கிளறியவாறே இருக்கவும். முக்கால்வாசி வெந்ததும் உப்பு சேர்த்துக் கிளறவும். வெண்டைக்காய் பதமாக வெந்ததும் இறக்கவும்.�,