Eஇனியும் இந்தியா வெல்லுமா?

Published On:

| By Balaji

நியூசிலாந்தின் பாசின் ரிசர்வ் மைதானத்தில் நடைபெற்று வரும் இந்தியா-நியூசிலாந்து அணிகளுக்கிடையேயான முதல் டெஸ்ட் போட்டியில், தோல்வியிலிருந்து தப்பிக்க இந்திய கிரிக்கெட் அணி கடுமையாகப் போராடி வருகிறது. ஆனால், இந்திய அணியின் போராட்டங்களையெல்லாம் நியூசிலாந்து அணியின் பவுலர்கள் தவிடுபொடியாக்கி வருகின்றனர்.

முதல் இன்னிங்க்ஸில் இந்திய அணி 165 ரன்களுக்குள் ஆல்-அவுட் ஆகிவிட, நியூசிலாந்து அணி 348 ரன்கள் அடித்தது. ஆட்டத்தின் இடையே மழை குறுக்கிட்டு மைதானத்தின் தன்மையை மாற்றியது நியூசிலாந்து அணிக்கு சாதகமாக அமைந்தது.

எனவே, இரண்டாவது இன்னிங்க்ஸில் இந்திய அணி வெளிப்படுத்தும் ஆட்டத்தைப் பொறுத்து வெற்றியும் தோல்வியும் நிர்ணயிக்கப்படும் என்ற நிலையில் இரண்டாம் பாதி ஆட்டம் தொடங்கியது. முதல் இன்னிங்ஸில் எந்த இடத்திலெல்லாம் இந்திய அணி தவறு செய்ததோ அதே தவறுகளை இரண்டாவது இன்னிங்க்ஸிலும் செய்து நான்கு விக்கெட்டுகளை இழந்திருக்கிறது இந்திய கிரிக்கெட் அணி. இதுபோன்ற கடுமையான சூழலில் இருக்க வேண்டிய நிதானம் சுத்தமாக இல்லாமல் விராட் கோலி போன்ற சீனியர் பிளேயர் 19 ரன்களில் அவுட் ஆவது இந்திய அணியின் எதிர்காலத்தையே கேள்வி கேட்கவைக்கும் அளவுக்கு மாறியிருக்கிறது.

மூன்றாம் நாள் ஆட்ட முடிவில் நான்கு விக்கெட் இழப்புக்கு 144 ரன்கள் எடுத்திருக்கிறது இந்திய அணி. நியூசிலாந்து முதல் இன்னிங்க்ஸில் எடுத்த 348 ரன்களைக் கடந்து செல்லவே இன்னும் 39 ரன்கள் எடுக்கவேண்டும். 39 ரன்களுக்குப் பிறகு இந்திய அணியின் ஆறு பேட்ஸ்மேன்கள் எடுக்கும் ஸ்கோரை நியூசிலாந்து அணி எடுத்துவிட்டால் அவர்களது வெற்றியை தடுக்கவே முடியாது. இதற்கு கோலி தலைமையிலான இந்திய அணி என்ன செய்யப்போகிறது என்பது தான் இங்கு ரசிகர்களிடையே தொக்கி நிற்கும் கேள்வி.�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share