சக்தி சவுந்தரராஜன் இயக்கவுள்ள படத்தில் கதாநாயகனாக நடிக்க ஆர்யா ஒப்பந்தமாகியுள்ளார்.
தமிழில் வித்தியாசமான கதைக்களங்களைக் கொண்டு படங்களை இயக்கி வரும் முக்கிய இயக்குநர்களில் சக்தி சவுந்தரராஜனும் ஒருவர். வங்கிக் கொள்ளையை மையமாக வைத்து இவர் இயக்கிய நாணயம் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. பின்னர் ஒரு ஜெர்மன் ஷெப்பர்ட் நாயை மையமாக வைத்து இவர் இயக்கிய ‘நாய்கள் ஜாக்கிரதை’ படமும் நல்ல வரவேற்பை பெற்றது. பின்னர் இந்தியாவின் முதல் ஜாம்பி படமான ‘மிருதன்’ மற்றும் முதல் விண்வெளித் திரைப்படமான ‘டிக் டிக் டிக்’ ஆகியவையும் கவனம் பெற்றன.
இந்நிலையில் சக்தி சவுந்தரராஜன் இயக்கவுள்ள அடுத்த படத்தில் கதாநாயகனாக நடிக்க நடிகர் ஆர்யா ஒப்பந்தமாகியுள்ளார். இப்படத்தை ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்தின் கே.இ.ஞானவேல்ராஜா தயாரிக்கவுள்ளார். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும், தலைப்பும் நாளை (மார்ச் 9) மாலை 6 மணியளவில் அறிவிக்கப்படவுள்ளது. இந்தப் படத்திற்கு ‘டெட்டி’ என தலைப்பிடப்பட்டுள்ளதாக சில செய்திகள் வெளியாகியுள்ளன.
மேலும், நடிகர் ஆர்யாவுக்கும், சாய்ஷாவுக்கும் விரைவில் திருமணம் நடைபெறவுள்ளது. கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் காப்பான் திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் ஆர்யா நடித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு பணிகளை ஆர்யா அண்மையில் முடித்துக்கொண்டார்.�,