ஒரு நாளில் பல்வேறு வீடியோக்கள் சமூக வலைதளத்தில் பகிரப்பட்டு வந்தாலும் ஒரு சில வீடியோக்கள்தாம் நம்மை அதிகளவு ரசிக்கவைக்கும். அந்த வகையில், இந்த வீடியோவும், குறிப்பாக விலங்கு பிரியர்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது.
செல்ல பிராணிகளில் அதிகளவு மக்கள் விரும்புவது நாய்கள்தாம். குறிப்பாகப் பெண்கள் படுக்கை அறை வரையில் நாய்களை அழைத்துச் செல்வது, அதற்குச் செல்ல பெயர்களை வைப்பது, அது சாப்பிட்டால்தான் தானும் சாப்பிடுவேன் என்று அடம்பிடிப்பது போன்ற நிகழ்ச்சிகள் எல்லாம் வீடுகளில் நடக்கும். அந்த வகையில் செல்ல பிராணிகளும் தங்களை வளர்ப்பவர்களுக்கு உதவுவது உட்பட மிகுந்த விசுவாசத்துடன் நடந்துகொள்ளும். இந்த நாயும் தனது உரிமையாளருக்கு ஒரு நண்பனைப் போல உதவுகிறது.
மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் ஓர் இளம் பெண் ஒரு கடையைவிட்டு வெளியே செல்கிறார். அப்போது அவரைப் பின்தொடர்ந்து சென்ற அவரது வளர்ப்பு நாய், அவரது ஹேண்ட் பேக்கை தன் வாயில் கவ்விக்கொண்டு சென்றது. சமத்தாக ஹேண்ட் பேக் எடுத்துச் செல்லும் 24 நொடி கொண்ட இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கு நெட்டிசன்கள் பல்வேறு கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர். எந்தவொரு திருடனும் கைப்பையைப் பறிக்க முடியாது என்றும், சிறந்த நண்பன் என்றும் கூறி வருகின்றனர்.
�,”