இரண்டு மருத்துவர்கள், பிபிஇ கிட் உடை அணிந்து பாலிவுட் பாடலுக்கு நடனமாடும் வீடியோ ஒன்றை மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் உள்ள அனைவருக்கும் தடுப்பூசி போடுவதை உறுதி செய்வதற்காக மருத்துவர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்கள் வீடு வீடாக சென்று தடுப்பூசி போட்டு வருகின்றனர். மலைப்பகுதிகளில் உள்ள முதியோர்கள், ஊனமுற்றோர்கள் தடுப்பூசி செலுத்துவதற்காக நகரங்களுக்கு வர முடியாது என்பதால், தொலைத் தூரத்தில் உள்ள குறிப்பாக மலைப் பகுதிகளில் ராணுவத்தின் உதவியுடன் யூனியன் பிரதேச நிர்வாகம் மக்களுக்கு தடுப்பூசி செலுத்தி வருகிறது.
இந்நிலையில் தோடா மாவட்டத்தில் உள்ள கடினமான மலைப்பகுதிகளையும், ஆறுகளையும் கடந்து தடுப்பூசி செலுத்தும் பணி முடிவடைந்ததை, மருத்துவர்கள் நடனமாடி கொண்டாடியுள்ளனர். மன அழுத்தத்தில் இருக்கும் மருத்துவர்களுக்கு இதுபோன்ற சம்பவங்கள் நிம்மதியையும், ஆறுதலையும் தருகின்றன.
VIDEO: Happy to see our frontline healthcare workers relieving their stress after finishing door-to-door vaccination drive in far-flung hilly terrains of district #Doda. #JammuAndKashmir pic.twitter.com/bmNN9Xjg06
— Dr Jitendra Singh (@DrJitendraSingh) June 19, 2021
தடுப்பூசி போடும் பணி நிறைவடைந்ததை கொண்டாடும் விதமாக பிபிஇ கிட் உடை அணிந்த மருத்துவர்கள் ‘கலா சாஷ்மா என்ற பிரபலமான பாலிவுட் பாடலுக்கு நடனமாடும் வீடியோ ஒன்றை மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் தனது ட்விட்டர் பக்கத்தில் இன்று பகிர்ந்துள்ளார். அதில், “மன அழுத்தத்தைப் போக்கும் வகையில் நடனமாடும் மருத்துவ பணியாளர்களை பார்ப்பது சந்தோஷமாக இருக்கிறது”என்று பதிவிட்டுள்ளார்.
**-வினிதா**
�,”