^அம்பானி வீட்டு கிரிக்கெட் தீபாவளி!

Published On:

| By Balaji

தீபாவளி பண்டிகையைக் கொண்டாட அனைவரும் மும்முரமாகத் தயாராகி வருகின்றனர். வரும் அக்டோபர் 27, ஞாயிற்றுக் கிழமையன்று தீபாவளி கொண்டாடப்படும் நிலையில் அதற்கான கொண்டாட்டங்கள் இப்போதே ஆரம்பமாகி விட்டது.

இந்த நிலையில் ரிலையன்ஸ் நிறுவனத் தலைவர் முகேஷ் அம்பானியும் அவரது மனைவி நீதா அம்பானியும் இணைந்து கடந்த வியாழக்கிழமை (அக்டோபர் 24) மும்பை இந்தியன்ஸ் கிரிக்கெட் அணி வீரர்களுக்குத் தீபாவளி விருந்தளித்துச் சிறப்பித்துள்ளனர்.

ஐபிஎல் போட்டியில் விளையாடும் மும்பை இந்தியன்ஸ் அணியின் உரிமையாளர் நீதா அம்பானி, தனது அணி வீரர்களுக்கு மும்பையில் அமைந்திருக்கும் ஜியோ வேர்ல்டு சென்டரில் ஆடம்பர விருந்து அளித்தார். அந்த விருந்தில் பலவகையான அறுசுவை உணவுகள் பரிமாறப்பட்டது. இந்த விருந்தில் அம்பானி குடும்பத்தினரும் மும்பை இந்தியன்ஸ் அணி வீரர்களும் கலந்துகொண்டனர்.

யுவராஜ் சிங் தனது மனைவி ஹேசல் கீச்சுடன் இந்த விருந்தில் கலந்து கொண்டார். அதே போன்று கிரிக்கெட் வீரர் ஜாஹீர் கான் அவரது மனைவி சகாரிகாவுடன் கலந்து கொண்டு சிறப்பித்தார். மேலும் ஹர்திக் பாண்டியா, க்ரூனல் பாண்டியா போன்ற பிற இந்திய அணி வீரர்களும் இந்த சிறப்பு தீபாவளி விருந்தில் கலந்துகொண்டனர்.

கடந்த மாதம் கொண்டாடப்பட்ட விநாயகர் சதுர்த்தி விழாவும் முகேஷ் அம்பானியின் இல்லத்தில் வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் பாலிவுட் நட்சத்திரங்கள் அமிதாப் பச்சன், அமீர்கான், சல்மான் கான், ஷாரூக்கான் ஆகியோர் தங்கள் குடும்பத்தினருடன் கலந்து கொண்டனர். இதேபோன்று முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் அவரது மனைவி அஞ்சலி மகன் அர்ஜுனுடன் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share