முதல்வர் பெயரைப் பயன்படுத்தும் சமூக விரோதிகள்: ஸ்டாலின்

Published On:

| By Balaji

.தமிழகத்தின் ஆட்சி யார் கையில் உள்ளது என முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு திமுக தலைவர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

காஞ்சிபுரம் மாவட்டம், தாம்பரம் அருகே உள்ள மேலக்கோட்டையூர் குளத்தில் திருட்டுத்தனமாக மண் அள்ளியதாக அவசர எண் 100க்கு வந்த தகவலையடுத்து, அங்கு விரைந்த தாழம்பூர் போலீசார் சட்டவிரோதமாக மண் அள்ளிய மூன்று லாரிகளைப் பிடித்துள்ளனர். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து காவல் நிலையத்துக்குச் சென்ற ஆளுங்கட்சியினர், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி லாரி மீதே வழக்கு போடுகிறீர்களா என்று கேட்டு மிரட்டல் விடுத்துச் சென்றதாகச் செய்திகள் வெளியாகின.

இந்தச் சம்பவம் நடந்த சில மணி நேரத்தில் லாரிகளைப் பிடித்த போலீசார், தென்மண்டலத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டனர். ஆளுங்கட்சியினரின் அழுத்தம் காரணமாகவே அவர்கள் இடமாற்றம் செய்யப்பட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

இதைச் சுட்டிக்காட்டி தனது ட்விட்டர் பக்கத்தில் நேற்று கருத்து தெரிவித்துள்ள திமுக தலைவர் ஸ்டாலின், “இது எடப்பாடி பழனிசாமியின் லாரி என மிரட்டும் அளவுக்கு, சமூக விரோதிகள் நடமாட்டத்துக்கு முதலமைச்சர் பெயரைப் பயன்படுத்துவது போன்ற அராஜகம் வேறு என்ன இருக்க முடியும்?” என்று தெரிவித்துள்ளார். மேலும், “ஆட்சி – எடப்பாடியின் கையிலா? மணல் கொள்ளையர்கள் கையிலா? தமிழகத்தில் நடப்பது சட்டத்தின் ஆட்சியா? குற்றத்தின் ஆட்சியா?” என்றும் கேள்விகள் எழுப்பியுள்ளார்.�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share