தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் தீக்காய சிறப்பு சிகிச்சை பிரிவு தொடங்கப்பட்டுள்ளது.
“தீபாவளியை முன்னிட்டு சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பட்டாசுகளை பாதுகாப்பாக வெடிக்க வேண்டும். பெரியவர்கள் துணையுடன் சிறியவர்கள் பட்டாசுகளை வெடிக்க வேண்டும். அதிக சப்தம் எழுப்பும் பட்டாசுகளை வெடிக்க கூடாது. குடிசை பகுதிகளிலும், வீட்டுக்குள் வைத்தும் பட்டாசுகளை வெடிக்க கூடாது” என்று எச்சரித்துள்ளார் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை டீன் வசந்தாமணி.
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் நேற்று (அக்டோபர் 26) பேட்டியளித்த அவர், “ஏதாவது அசம்பாவித சம்பவம் ஏற்பட்டால், தீக்காயம் ஏற்பட்டவர்களை உடனடியாக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து வரலாம். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் 10 படுக்கைகள் கொண்ட சிகிச்சை பிரிவு தொடங்கப்பட்டுள்ளது. இந்த சிகிச்சை பிரிவு 28ஆம் தேதி வரை செயல்படும்.
இந்தப் பிரிவில் ஒரு தலைமை மருத்துவர், இரண்டு உதவி மருத்துவர்கள், ஐந்து செவிலியர்கள், இரண்டு உதவியாளர்கள் 24 மணி நேரமும் இருப்பார்கள். சிகிச்சைக்கு தேவையான அனைத்து மருந்துகளும் இங்கு தயாராக உள்ளது” என்றும் கூறியுள்ளார்.
�,