iடெங்கு காய்ச்சல் :செய்ய வேண்டியது என்ன?

Published On:

| By Balaji

மெடிக்கல் செக் அப்-2

**டெங்கு காய்ச்சல் எதனால் ஏற்படுகிறது?**

இது டெங்கு பிளவி வைரஸ் என்னும் நுண் கிருமியால் உண்டாகிறது.இந்நோய் கொசுவினால் பரவும்.

**டெங்கு காய்ச்சல் அறிகுறி என்ன ?**

காய்ச்சல், உடம்பு வலி, மூட்டு வலி, உடம்பு முழுவதும் செந்நிறத்தில் தடிப்புகள் உண்டாகும்.

**மேலே சொன்ன அறிகுறிகள் தென்பட்டால் என்ன செய்ய வேண்டும்?**

ஓய்வு எடுக்க வேண்டும், நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். இளநீர், மோர், சூப், பால், பழரசம், எடுத்துக்கொள்ள வேண்டும். செயற்கை குளிர்பானங்களை தவிர்ப்பது நல்லது.

**சரி காய்ச்சலுக்கு என்ன மருந்து எடுக்க வேண்டும் ?**

paracetamol மட்டுமே எடுக்க வேண்டும். மற்ற அனைத்து வலி நிவாரணிகளைத் தவிர்க்க வேண்டும்.

**மருத்துவரை எப்பொழுது அணுக வேண்டும்?**

சர்க்கரை நோயாளிகள், கர்ப்பிணிப் பெண்கள், குழந்தைகள், முதியோர்கள் காய்ச்சல் வந்த உடனேயே மருத்துவரை அணுக வேண்டும்.

**இது எதுவும் இல்லை என்றால் மருத்துவரை எப்போது காண்பது?**

காய்ச்சலுடன், கீழ்க்காணும் எச்சரிக்கை அறிகுறிகள் இருந்தால் மருத்துவரிடம் ஆலோசனை பெற வேண்டும். எச்சரிக்கை அறிகுறிகள் – வயிற்று வலி, வாந்தி, அசதி, ஈறுகளில் ரத்தம் கசிதல், மலத்தில் ரத்தம் வருவது, பெண்களுக்கு மாத விடாய் அதிகமாக இருத்தல், சிறுநீர் குறைவாக போவது இவற்றுள் ஏதேனும் இருந்தால், மருத்துவரை அணுக வேண்டும்.

**டெங்கு காய்ச்சலால் ஏற்படும் ஆபத்துக்கள் என்ன?**

ரத்த அழுத்தம் குறைவு மற்றும் ரத்ததட்டு குறைவு.

**இந்த இரண்டில் எதனால் உயிருக்கு ஆபத்து ?**

ரத்த அழுத்தம் குறைவால் தான் ஆபத்து. அதனால் தான் நீர் ஆகாரம் எடுத்து உடலைப் பாதுகாத்து கொள்ள வேண்டும்.

**பப்பாளி இலை மற்றும் அதில் தயாரிக்க பட்ட மருந்தினால் என்ன பயன்?**

அந்த மருந்துகள் ரத்ததட்டு எண்ணிக்கையை கூட்டும். ஆனால் டெங்கு நோயை குறைக்காது. இந்த மருந்து ரத்த அழுத்தக் குறைவையும் சரி செய்யாது.

**டெங்கு வராமல் இருக்கச் செய்யவேண்டியது என்ன?**

அரசு அறிவுரைப் படி மழை நீர் தேங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும், கொசு கடிக்காமல் பார்த்து கொள்ள வேண்டும். டெங்குவில் இருந்து பாதுகாத்துக் கொள்ள கொசு கடிக்காமல் பாதுகாத்துக்கொள்ளவும் மீறிக் காய்ச்சல் வந்தால் – ஓய்வு எடுங்கள், நீராகாரம் எடுத்துக் கொள்ளுங்கள், வலி நிவாரணிகள் தவிர்க்கவும், மேலே குறிப்பிட்டுள்ள எச்சரிக்கை குறியீடுகள் இருந்தால் உடனே அரசு மருத்துவமனை அல்லது மருத்துவரை அணுகவும்.

(கட்டுரையாளர் குறிப்பு)

**மருத்துவர் ரம்யா அய்யாதுரை**

**எம்.டி., டி.என்.பி., எம்.ஆர்.சி.பி (பொது மருத்துவம்)**

**மருத்துவ பேராசிரியர்**

**கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரி வேலூர்.**

**சர்வதேச மருத்துவ ஆய்விதழ்களில் மருத்துவ ஆய்வுக் கட்டுரைகளைத் தொடர்ந்து எழுதி வருபவர்.**

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share