}மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு!

public

மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 17 சதவிகிதத்தில் இருந்து 28 சதவிகிதமாக உயர்த்தி வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

நாடு முழுவதும் கொரோனா பரவலைத் தொடர்ந்து கடந்தாண்டு ஜனவரி முதல் தற்போது வரை மூன்று தவணைகளுக்கு மத்திய அரசு ஊழியர்களுக்கு அறிவித்த அகவிலைப்படி உயர்வை மத்திய அரசு நிறுத்தி வைத்தது. கொரோனா தொற்றுக்காக பெருமளவு தொகை செலவு செய்யப்படுவதாலும், போதிய நிதி ஆதாரம் இல்லாததாலும் இந்த முடிவெடுக்கப்பட்டது.

இது தொடர்பாக ஓர் ஆண்டு இடைவெளிக்குப்பின் மத்திய அமைச்சரவை நேரடியாக பிரதமர் மோடி இல்லத்தில் நேற்று கூடியது. இந்த அமைச்சரவைக் கூட்டத்தில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், புதிதாக நியமிக்கப்பட்ட அமைச்சர்கள் பங்கேற்றனர். இந்தக் கூட்டத்தில் பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டன.

முக்கியமாக மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 17 சதவிகிதத்தில் இருந்து 28 சதவிகிதமாக உயர்த்தி வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் தந்துள்ளது.

இந்த அகவிலைப்படி உயர்வு ஜூலை 1 முதல் அமலுக்கு வரும் என்றும் ஓய்வூதியதாரர்களுக்கும் ஜூலை 1 முதல் இந்த அகவிலைப்படி உயர்வு கிடைக்கும் என்றும் மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் செய்தியாளர்கள் கூட்டத்தில் பேசியபோது உறுதி செய்துள்ளார்.

**ராஜ்**

.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *