mபார்ட்னர் தேடிய தலப்பாக்கட்டி பிரியாணி!

Published On:

| By Balaji

தமிழகத்தின் புகழ்பெற்ற பிராண்ட் பிரியாணி நிறுவனமான திண்டுக்கல் தலப்பாக்கட்டி பிரியாணி, தங்களது வர்த்தகத்தை அண்டை மாநிலங்களுக்கும் விரிவுபடுத்தும் விதமாக, சி. எக்ஸ் என்ற தனியார் நிறுவனத்தை சம பங்கு நிறுவனமாக சேர்ந்த்து ஒப்பந்தம் செய்திருக்கிறார்கள். இதன் மூலமாக தலப்பா கட்டி நிறுவனத்துக்கு 260 கோடி ரூபாய் நிதி திரட்டுகிறது.

தமிழகத்தில் உணவகங்கள் குறிப்பாக, செயின் ஹோட்டல்ஸ் எனப்படும் உணவகச் சங்கிலி நிறுவனங்கள் தொடர்ந்து பொருளாதார ரிதியாக பின்னடைவை சந்தித்து வருகின்றன. நகரங்களில் கணிசமானோர் ஹோட்டல்களில் சாப்பிடுகிறார்கள் என்ற கருத்துரு இருக்கும் நிலையிலும் தமிழகத்தில் பல ஹோட்டல்களில் வீக் எண்ட் கூட்டம் கூட எதிர்பார்த்த மாதிரி இல்லை என்பதே எதார்த்தமாக இருக்கிறது.

இந்த சூழலில்தான் 1957 ஆம் ஆண்டு முதல் பிரியாணிக்கு பெயர் பெற்ற திண்டுக்கல் தலப்பா கட்டி நிறுவனம் சி எக்ஸ் பார்ட்னர்ஸ் நிறுவனத்தை தங்களின் சம பங்கு மூலதன நிறுவனமாக சேர்த்துக் கொள்ள ஒப்பந்தம் செய்துகொண்டிருக்கிறது என்றும், இதன் மூலம் 260 கோடி ரூபாய் தலப்பா கட்டி நிதி திரட்டுவதாகவும் உணவகத் தொழில் வட்டாரங்களில் இருந்து தகவல்கள் கிடைக்கின்றன.

இந்த ஒப்பந்தத்தின் முதல் கட்டமாக தலப்பா கட்டி பிரியாணி நிறுவனம் கேரளா, கர்நாடகா, ஆந்திரா ஆகிய அண்டை மாநிலங்களில் தனது நிறுவனங்களைத் திறக்க இருக்கிறது. அடுத்த கட்டமாக நாட்டின் கிழக்கு,மேற்கு பகுதிகளிலும் தலப்பாக்கட்டியை நிறுவி தமிழக பிரியாணியை தேசிய உணவாக அடையாளப்படுத்தும் முயற்சியும், வெளிநாடுகளில் இன்னும் அதிக கிளைகளைத் திறக்கும் முயற்சியும் நடந்து வருகிறது என்கிறார்கள்.

தற்போது வெளிநாடுகளில் ஏழு கடைகள் உட்பட தமிழகத்தில் 62 கடைகளை வைத்திருக்கும் தலப்பா கட்டி நிறுவனம், ஒரு நாளைக்கு நாலாயிரம் கிலோ பிரியாணி வணிகத்தில் ஈடுபட்டிருக்கிறது.

கடந்த பத்தாண்டுகளில்தான் நிறுவனப் படுத்தப்பட்ட பிரியாணி வர்த்தகம் அதிக வளர்ச்சியடைந்திருக்கிறது. அந்த வகையில் தமிழகத்தில் பிராண்ட் பிரியாணி வர்த்தகம் மட்டும் ஒரு வருடத்துக்கு 1,500 கோடி ருபாய் நடக்கிறது. இதர பிரியாணி வர்த்தகத்தையும் சேர்த்தால் ஒரு வருடத்துக்கு நாலாயிரம் கோடி ரூபாய் பிரியாணி வர்த்தகம் நடைபெற்று வருகிறது என்கிறார்கள் பிரியாணி தொழில் வட்டாரத்தில். தமிழகத்தில் மட்டும் 300 பிராண்ட் பிரியாணி நிறுவனங்கள் இயங்கி வருகின்றன என்பது குறிப்பிடத் தக்கது.�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share