vதேசிய கீதம்: அசுரன் ஓடும் தியேட்டரில் மோதல்!

Published On:

| By Balaji

அசுரன் திரைப்படம் பார்க்கச் சென்ற இடத்தில் தேசிய கீதம் ஒலிக்கப்பட்ட போது எழுந்து நிற்காததால் நான்கு பேர் தியேட்டரில் இருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டனர்.

திரைப்படம் துவங்கப்படுவதற்கு முன்பாக திரையரங்கங்களில் தேசிய கீதம் இசைக்கப்படுவது தற்போது வழக்கமாக உள்ளது. இந்தச் சூழலில் பெங்களூரில் அமைந்துள்ள ஓரியன் மாலில் தனுஷ்-மஞ்சு வாரியர் நடித்து சமீபத்தில் வெளியான அசுரன் திரைப்படம் திரையிடப்பட்ட போது திரைப்படம் தொடங்குவதற்கு முன்பாக தேசிய கீதம் இசைக்கப்பட்டது.

திரையரங்கில் இருந்த இரண்டு பெண்கள் உள்ளிட்ட நான்கு பேரைத் தவிர மற்ற அனைவரும் தேசிய கீதத்திற்கு எழுந்து நின்றனர். அந்த நான்கு பேரையும் கவனித்த கன்னட நடிகர் அரு கவுடா, தனது செல்ஃபோனில் அவர்களை வீடியோ எடுத்தார். அது மட்டுமின்றி ‘நீங்கள் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்களா? 52 வினாடி இசைக்கப்படும் தேசிய கீதத்துக்கு மரியாதை செய்யாமல் மூன்று மணி நேரம் ஓடும் திரைப்படம் பார்க்க எதற்காக வந்தீர்கள்’ என்று அவர்களிடம் கோபமாகக் கேட்டுள்ளார்.

தொடர்ந்து அவர்கள் திரையரங்கில் இருந்து வெளியேற்றப்பட்டனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பகிரப்பட்டது.

தேசிய கீதத்திற்கு மதிப்பு தராத இளைஞர்களைப் பலரும் கோபமாகத் திட்டினாலும், சிலர் அவர்கள் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டதற்கு கண்டனங்களையும் தெரிவித்துள்ளனர்.�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share