gபுதிய அம்சங்களுடன் பிட்னஸ் பேண்டுகள்!

Published On:

| By Balaji

ஜியோமி நிறுவனம் தங்களுடைய தயாரிப்பான ஃபிட்னஸ் பேண்டுகளில் புதிய மாடலை வெளியிட இருக்கிறது. வெளியாக இருக்கும் மி பேண்ட் 5-ல் (Mi Band 5) உள்ள சிறப்பு அம்சங்களை டீசன் ஹெல்ப் (Tizen Help)எனும் தகவல்களை வெளியிடும் தளம் வெளியிட்டுள்ளது.

இதன்படி மி பேண்ட் 5 -ல் என்.எப்.சி மற்றும் டி.என். டி வசதிகளுடன் மனச்சோர்வு மேளாண்மை குறித்த அம்சங்களும் இடம் பெற்றுள்ளன. அந்த தளம் வெளியிட்டிருக்கும் படங்களின் படி ஜியோமி நிறுவனம் மூன்று புதிய அறிமுகங்களை இந்தப் பேண்டில் சேர்த்துள்ளது. அதில் முக்கியமானதாக மனச்சோர்வு மற்றும் மூச்சு விடுதல் ஆகியவற்றை மேளாண்மை செய்யும் அமைப்பாகும்.

என்.எப்.சி தொழில்நுட்பத்தை ஜியோமி பயன்படுத்துவது இது முதல் முறையல்ல. ஏற்கனவே இந்த நிறுவனம் வெளியிட்ட மி பேண்ட் நான்கில் என்.எப்.சியுடன் கூடிய ஒரு மாடலை ரஷ்யாவில் வெளியிட்டது. இதன்மூலம் மாஸ்டர் கார்டுகளை பேண்டுடன் இணைப்பதன் மூலம் கார்டுகளை பிட்னஸ் பேண்டுகளை கொண்டே உபயோகிக்க முடியும். அதாவது உங்களுடைய பிட்னஸ் பேண்டை கொண்டு நீங்கள் எளிதில் பணம் செலுத்த முடியும். கார்டுக்கு பதிலாக வாட்சை நாம் இதில் உபயோகப்படுத்தலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் டிஎன்டி வசதியும் வழக்கமான முறையிலிருந்து மிக எளிதாக உபயோகிக்கும் விதத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. மற்றொரு அம்சமாக மி பேண்ட் 2 அமேசானின் அலெக்ஸாவையும் உபயோகப் படுத்தும் விதமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. மாதவிடாய் சுழற்சியை கண்காணிக்கும் வசதியையும் பெற்றுள்ளது இந்த புதிய ஜியோமி பேண்ட் .

இந்த புதிய மாடல் ஜூன் 11ஆம் தேதி விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

** – பவித்ரா குமரேசன்**�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share