பிரபல இயக்குநரும், நடிகருமான ராஜசேகர் உடல் நலக்குறைவால் இன்று(செப்டம்பர் 8) காலை காலமானார்.
ராபர்ட்-ராஜசேகர் என்ற இரட்டையர் இயக்குநர்களில் ஒருவரான இயக்குநர் ராஜசேகர் சமீப காலமாக உடல் நலம் சரியி்ல்லாமல் ராமச்சந்திரா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் இன்று காலை உயிரிழந்தார். இயக்குநராக மட்டுமில்லாமல் திரைப்பட நடிகராக, சின்னத்திரை நடிகராகவும் இருந்தார். சின்னத்திரை சங்கங்களிலும் பொறுப்பு வகித்தார் ராஜசேகர்.
1980ஆம் ஆண்டு பாரதிராஜா இயக்கத்தில் வெளிவந்த நிழல்கள் படத்தில் இவர் ஏற்றிருந்த பிரபு என்ற கதாபாத்திரம் அனைவரையும் ரசிக்க வைத்தது. ‘இது ஒரு பொன் மாலை பொழுது’ என்ற கிளாஸிக் பாடலின் முகமான ராஜசேகரின் மறைவு அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியிருக்கிறது.
ராபர்டுடன் இணைந்து ராஜசேகர் மனசுக்குள் மத்தாப்பூ, சின்னப்பூவே மெல்லப் பேசு, தூரம் அதிகமில்லை, பறவைகள் பலவிதம், தூரத்துப் பச்சை, கல்யாணக் காலம் உள்பட பல படங்கள் இயக்கியுள்ளார்.
**
மேலும் படிக்க
**
**[திமுக: ஐம்பெரும் தலைவர்களில் ஒருவரின் வாரிசுக்கே இந்த நிலையா?](https://minnambalam.com/k/2019/09/07/120)**
**[வடிவேலு ஒரு தீர்க்கதரிசி: அப்டேட் குமாரு](https://minnambalam.com/k/2019/09/07/109)**
**[பேக் அப்: அனு கொடுத்த அறிவிப்பு!](https://minnambalam.com/k/2019/09/07/115)**
**[சந்திராயன் 2: லேண்டர் விக்ரமின் நிலை என்ன? ](https://minnambalam.com/k/2019/09/08/17)**
**[விமர்சனம்: சிவப்பு மஞ்சள் பச்சை!](https://minnambalam.com/k/2019/09/08/8)**
�,”