D’வெங்காயத்துக்குத் தடை’!

Published On:

| By Balaji

வெங்காய ஏற்றுமதியை இந்தியா தடை விதித்துவிட்ட நிலையில், “என் வீட்டுச் சமையல்காரரிடம், தனது உணவில் அனுமதி இல்லாமல் வெங்காயத்தைச் சேர்க்கவேண்டாம்” என்று சொல்லிவிட்டதாக வங்கதேச பிரதமர் ஷேக் ஹசினா தெரிவித்துள்ளார்.

வங்கதேச பிரதமர் ஷேக் ஹசினா, 4 நாள் அரசுமுறை பயணமாக இந்தியா வந்துள்ளார். இரு நாடுகளுக்கு இடையேயான நட்புறவை மேம்படுத்தவும் முதலீடுகளை ஈர்க்கும் வகையிலும் இந்த பயணத்தை அவர் மேற்கொண்டிருக்கிறார். நேற்று டெல்லிக்கு வந்தடைந்த அவர் இன்று (அக்டோபர் 4) தொழில்துறை கூட்டமைப்பான அசோசெம், இந்தியத் தொழில்துறை கூட்டமைப்பு நிர்வாகிகள் ஆகியோரிடம் ஆலோசனை நடத்தினார். ரயில்வேத் துறை அமைச்சர் பியூஸ் கோயலும் உடன் இருந்தார்.

அப்போது பேசிய வங்க தேச பிரதமர், இந்தியா ஏன் திடீர் என்று வெங்காய ஏற்றுமதியை நிறுத்தியது என்று தெரியவில்லை. ஏற்றுமதியை நிறுத்தியதும் நான் என்ன செய்தேன் என்று தெரியுமா. சமையல் காரரை அழைத்து என்னுடைய அனுமதி இல்லாமல் சமையலில் வெங்காயம் பயன்படுத்த வேண்டாம் என்று சொல்லிவிட்டேன் என நகைச்சுவையாகச் சொல்லியுள்ளார். இது அங்கிருந்தவர்கள் மத்தியில் சிரிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இதைத்தொடர்ந்து ஷேக் ஹசினா, ”திடீரென இந்தியா வெங்காய ஏற்றுமதியை நிறுத்தியது எங்களுக்கு மிகவும் சிக்கலாக இருக்கிறது. எதிர்காலத்தில் இதுபோன்ற முடிவுகளை எடுக்கும் முன் எங்களுக்கு முன்கூட்டியே தெரிவித்தால் உதவியாக இருக்கும்” என்று தெரிவித்துள்ளார்.

வங்கதேசத்தில் ஒரு கிலோ வெங்காயம் ரூ.100க்கு விற்பனையாகிறது. வெங்காய தட்டுப்பாடு நிலவுவதால் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். வங்கதேசம் மட்டுமின்றி இலங்கை, நேபாள் உள்ளிட்ட ஆசிய நாடுகளும் பாதிக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share