�
நடிகர் விஜய் தேவரகொண்டா நடித்துள்ள டியர் காம்ரேட் படத்தின் டீசர் பற்றிய அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது.
விஜய் தேவரகொண்டா நடிப்பில் தெலுங்கில் வெளியான கீதா கோவிந்தம் படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றதுடன் பாக்ஸ் ஆபீசிலும் வசூலை குவித்தது. இப்படத்தில் விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக ராஷ்மிகா மண்டானா நடித்திருந்தார். இவர்கள் இருவரும் மீண்டும் ‘டியர் காம்ரேட்’ படத்தில் நடித்துள்ளதால் இப்படத்திற்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். இந்நிலையில், டியர் காம்ரேட் படத்தின் டீசர் பற்றிய அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது. இதுகுறித்து விஜய் தேவரகொண்டா தனது ட்விட்டர் பக்கத்தில், “தமிழ், தெலுங்கு, மலையாள, கன்னட காம்ரேடுகளே, நீங்கள் ரெடியா? மார்ச் 17ஆம் தேதி டீசர் வெளியாகிறது” என்று தெரிவித்துள்ளார்.
இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது. இப்படத்தை பரத் கம்மா இயக்கியுள்ளார். இப்படத்தில் ஒரு மாணவ தலைவராக விஜய் தேவரகொண்டா நடிக்கிறார். ஒரு விளையாட்டு வீராங்கனை கதாபாத்திரத்தில் ராஷ்மிகா மண்டானா நடிக்கிறார். இப்படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார். ஒளிப்பதிவாளராக சுஜித் சரங் பணிபுரிந்துள்ளார். நடன இயக்குநராக தினேஷ் மாஸ்டர் நியமிக்கப்பட்டுள்ளார். இப்படத்தை தொடர்ந்து விஜய் தேவரகொண்டா தனது அடுத்த படத்தில் பைக் ரேசர் கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.�,