மேற்கு வங்கத்தில் வன்முறையைத் தூண்டும் போலி கலவரப்படங்கள் மற்றும் செய்திகளை சமூக ஊடக வலைத்தளங்களில் இருந்து நீக்க பாஜக பிரமுகர்கள் மறுப்பு தெரிவித்ததால், கடந்த மாதத்தில் மட்டும் 7 மதக்கலவரங்கள் ஏற்பட்டுள்ளன.
மேற்கு வங்க மாநிலத்தில் கலவரம் நடப்பதாகச் சமூக ஊடக வலைத்தளங்களில் பரவி வரும் போலி புகைப்படங்கள் மற்றும் செய்திகளை நீக்க பாஜக-வினர் தொடர்ந்து பிடிவாதம் பிடித்து வருவதாகச் சர்ச்சை எழுந்துள்ளது. கடந்த வாரம், ஜூலை 2ஆம் தேதி, மேற்கு வங்கத்தில் உள்ள வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் பாதுரியா என்ற பகுதியில், முஸ்லீம்கள், இந்துக்கள் மீது கலவரம் செய்து, தாக்குதல் நடத்துவதாக, சமூக ஊடகங்களில் செய்தி பரவியது. அதேபோல், பெண்களை மானபங்கம் செய்வது போன்றும் முகமத் என்பவரின் முகநூலில் சில படங்கள் வெளியிடப்பட்டன.
சமூக ஊடகங்கள் அதிக எச்சரிக்கையுடன் செயல்படுவதற்கு பதிலாக, பொய்யான செய்தி வெளிவந்ததைத் தொடர்ந்து காட்டாறு வெள்ளம்போல் வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டது. மிகைப்படுத்தப்பட்ட, தவறான சம்பவங்களால், வன்முறைக்கு அளவே இல்லாமல் இந்துக்களுக்கு எதிரான தாக்குதல்கள் நடந்ததாகக் கூறிவிட்டன. இந்நிலையில், சமூக ஊடகங்களில் வெளிவந்த படங்கள் அனைத்தும், போஜ்பூரி திரைப்படங்கள் மற்றும் வங்கதேசத்தில் நடைபெற்ற கலவர காட்சிகளில் இருந்து திருடப்பட்டதாக, தற்போது உண்மை தெரிய வந்துள்ளது.
அதையடுத்து, கடந்த சனிக்கிழமை ஜூலை 8ஆம் தேதி, மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி, கொல்கத்தாவில் செய்தியாளர்களிடம் பேசுகையில், மாநிலம் முழுவதும் கடந்த வாரம் தவறான, போலி செய்திகள் சமூக ஊடகங்கள் வாயிலாகப் பரவியுள்ளது. அந்தச் செய்திகள் அனைத்தும், பங்களாதேசில் உள்ள கமீலா என்ற பகுதியில் நடைபெற்ற கலவரம், போஜ்பூரி படங்களில் உள்ள பாலியல் பலாத்கார காட்சி போன்ற வீடியோ தொகுப்புகளை மேற்கு வங்கத்தில் நடைபெற்றதுபோல் சித்தரித்து வெளியிடப்பட்டுள்ளன. இதை, ஃபேஸ்புக்கில் அதிகம் பேர் பகிர்ந்து வருகின்றனர். இதில், துளியும் உண்மையில்லை. ஃபேஸ்புக்கை நான் என்றும் மதிக்கிறேன். ஆனால், போலிபுக்கை நான் மதிப்பதில்லை என்று மம்தா பானர்ஜி கூறினார்.
இந்நிலையில், கடந்த ஜூன் 5ஆம் தேதி, மேற்கு வங்கத்தில் ஒரு முஸ்லீம் கும்பல் ஒரு ஹிந்து பெண்ணை தாக்கியது என்று வெளியான சமூக ஊடக வதந்தியை ஏபிபி செய்தி நிறுவனம் நிராகரித்தது. அதையடுத்து, செய்திகளின் உண்மைத்தன்மை இல்லாததை அறிந்த சமூக வலைத்தளமானது, அதில் குறிப்பிடப்பட்ட போலி செய்தித் தகவல்களை அகற்றியது.
சமூக வலைத்தளங்களில் வெளியான இந்தச் சர்ச்சைக்குரிய நிகழ்ச்சி பங்களாதேஷில் நிகழ்ந்த ஒரு சம்பவம்தான். மேலும், இந்தப்படத்தை வெளியிட்ட சிறுவனின் பெற்றோர்கள், அவன் சிறுவனாக இருந்தபோதே இறந்துவிட்டதாக ஸ்க்ரோல்.இன். செய்தியாளரிடம் முகமத் வீட்டுக்கு அருகில் இருந்தவர்கள் தெரிவித்தனர்.
சர்ச்சைக்குரிய இந்தப் புகைப்படங்களை ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் இருந்து நீக்கும் பணிகளை, பாஜக தரப்பில் இதுவரை செயல்படுத்தவில்லை என்றும், இதுகுறித்து பாஜக தலைவர்கள் கண்டும், காணாமல் இருப்பதாக மேற்கு வங்கத்தில் பெரும் அதிருப்தி ஏற்பட்டுள்ளது.
�,