தமிழ் சினிமாவில் முதல் ஸ்பூஃப் வகைத் திரைப்படமாக 2010ஆம் ஆண்டு வெளியானது தமிழ் படம். சி.எஸ்.அமுதன் இயக்கத்தில் வெளியான அந்தப் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. அதைத் தொடர்ந்து விமலை கதாநாயகனாகக் கொண்டு ‘ரெண்டாவது படம்’ என்ற பெயரில் புதிய படத்தை இயக்கிவந்தார்.
சில ஆண்டுகளுக்கு முன்னரே இந்தப் படத்தின் பணிகள் அனைத்தும் நிறைவடைந்துவிட்டது. 2014ஆம் ஆண்டு படம் வெளியாவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் சில காரணங்களால் படம் வெளியாகாமல் நின்று போனது. இதில் விஜய லட்சுமி, ரம்யா நம்பீசன் என இரு கதாநாயகிகள் நடித்துள்ளனர். அரவிந்த் ஆகாஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இந்தப் படம் வெளியாகாத நிலையில் அமுதன் சிவாவை கதாநாயகனாகக் கொண்டு ‘தமிழ் படம் 2’ படத்தை இயக்கினார். கடந்த ஆண்டு வெளியான இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது.
தற்போது ரெண்டாவது படத்தை ரிலீஸ் செய்யும் முயற்சியில் படக்குழு இறங்கியுள்ளது. ஏப்ரல் 26ஆம் தேதி படத்தை வெளியிட முயற்சிகள் நடைபெற்றுவருகின்றன.
�,