dமீண்டு வரும் நெட்வொர்க் நிறுவனங்கள்!

public

ரிலையன்ஸ் ஜியோ வருகையால் ஏற்பட்ட வருவாய் இழப்பிலிருந்து தொலைத் தொடர்பு நிறுவனங்கள் மீண்டு வருவதாகவும், 2018ஆம் ஆண்டின் முடிவுக்குள் நிலைமை சீராகிவிடும் எனவும் ஃபிட்ச் நிறுவனம் தனது ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ளது.

2016ஆம் ஆண்டின் இறுதியில் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் இந்திய தொலைத் தொடர்புத் துறையில் நுழைந்த பிறகு கடுமையான கட்டணப் போர் நிலவி வருகிறது. வாடிக்கையாளர்களுக்குக் குறைந்த கட்டணத்தில் சலுகை வழங்கி அவர்களை வேறு (ஜியோ) நெட்வொர்க் இணைப்புக்கு மாறவிடாமல் தக்கவைத்துக்கொள்வதே பெரும் பாடாகிவிட்டது. துவக்கத்தில் இலவசச் சலுகைகளை வழங்கிவந்த ஜியோ பின்னர் கட்டணம் வசூலிக்கத் தொடங்கியது. இந்தியாவின் மிகப்பெரிய நெட்வொர்க் நிறுவனமான ஏர்டெல், அக்டோபர் – டிசம்பர் காலாண்டில் 39 சதவிகித சரிவுடன் ரூ.306 கோடியை மட்டுமே ஈட்டியது. பிற நிறுவனங்களுக்கும் கடுமையான வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

வருவாய் இழப்பால் இக்கட்டான சூழலில் இருக்கும் இந்தியத் தொலைத் தொடர்புத் துறையின் எதிர்காலம் குறித்த தனது கண்ணோட்டத்தை ஃபிட்ச் நிறுவனம் ஆய்வறிக்கையாக வெளியிட்டுள்ளது. அதில், ‘2017ஆம் ஆண்டில் சரிவைச் சந்தித்த தொலைத் தொடர்புத் துறையானது 2018இல் இயல்பு நிலைக்குத் திரும்பும். ஏர்டெல், ஜியோ மற்றும் வோடஃபோன் – ஐடியா நிறுவனங்கள் இந்தியத் தொலைத் தொடர்புச் சந்தையில் இனி ஆதிக்கம் செலுத்தும். இவற்றின் இணைந்த சந்தை மதிப்பு 2018ஆம் ஆண்டில் 90 சதவிகிதமாக இருக்கும். ஒட்டுமொத்தமாக 2018ஆம் ஆண்டில் இந்திய தொலைத் தொடர்புத் துறை வருவாய் உயர்வைச் சந்திக்கும்’ என்று கூறப்பட்டுள்ளது.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *