34 ஆண்டுகளுக்குப் பின் வெளியாகும், டாம் க்ரூஸ் நடித்த டாப் கன் படத்தின் இரண்டாம் பாகமான டாப் கன்: மேவரிக் படத்தின் டிரெய்லர் வெளியாகி வைரலாகி வருகிறது.
1986ஆம் ஆண்டு மறைந்த இயக்குநர் டோனி ஸ்காட் இயக்கத்தில் வெளியான படம் டாப் கன். டாம் க்ரூஸ் கதாநாயகனாக வளர்ந்து வரும் காலத்தில் நடித்த இப்படமே இவரை பாக்ஸ் ஆபீஸ் நாயகனாக மாற்றியது. படம் வெளியான சமயம், கலவையான விமர்சனங்களை சந்தித்தது டாப் கன். படத்தில் இடம் பெறும் அதிரடியான வான்வழி ஸ்டண்ட் காட்சிகளுக்காக கொண்டாடப்பட்ட டாப் கன், வெளியான நான்கு வாரங்களுக்குப் பிறகு, திரையிட்ட திரையரங்குகளின் எண்ணிக்கை 45 சதவீதம் வரை அதிகரித்தது. விமர்சனத்துக்குள்ளான டாப் கன் வசூல் ரீதியாக அனைவரையும் ஆச்சர்யத்துக்குள்ளாக்கியது. 15 மில்லியனில் எடுக்கப்பட்டு 356 மில்லியன் வரை வசூல் செய்தது.
இந்த நிலையில், 34 ஆண்டுகளுக்குப் பின் டாம் க்ரூஸின் டாப் கன் இரண்டாம் பாகமாக டாப் கன்: மேவரிக் என்ற பெயரில் வெளியாகவுள்ளது. டிரான்: லீகஸி படத்தை இயக்கிய ஜோசஃப் கோனிஸ்கி இப்படத்தை இயக்கியிருக்கிறார். டாப் கன்: மேவரிக் படத்தின் டிரெய்லர் ஜுலை 18ஆம் தேதி இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
டாம் க்ரூஸ் டாப் கன்னின் புதிய விமான பயிற்றுவிப்பாளராக வருகின்றார். முதல் பாகத்தில் க்ரூஸின் நண்பனாக வரும் ‘கூஸ்’ என்பவரின் மகனான பிராட்லியை வழிநடத்தும் பயிற்றுவிப்பாளராக இப்படத்தின் கதை தொடரும் எனத் தெரிகிறது. டிரெய்லரில் உள்ளடக்கிய ‘விஷுவல்கள்’ சிறப்பாக அமைந்துள்ளன. காட்சி ரீதியாக பிரமிப்பை ஏற்படுத்தும் இதன் டிரெய்லர் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்கவைக்கின்றன.
ஜூன் 26, 2020-ல் டாப் கன்: மேவரிக் படத்தை பாராமெளன்ட் பிக்சர்ஸ் வெளியிடவுள்ளது.
[டாப் கன்: மேவரிக் டிரெய்லர்](https://www.youtube.com/watch?v=qSqVVswa420)
**
மேலும் படிக்க
**
**[டிஜிட்டல் திண்ணை: சசிகலா நடத்திய மெகா குடும்ப பஞ்சாயத்து!](https://minnambalam.com/k/2019/07/19/85)**
**[BIG BOSS 3: ஸ்மோக்கிங் ரூம் பஞ்சாயத்து!](https://minnambalam.com/k/2019/07/19/38)**
**[ அடிக்கப் பாய்ந்த சத்யா – அடக்கிய சேகர்பாபு: சட்டமன்ற காட்சிகள்!](https://minnambalam.com/k/2019/07/18/25)**
**[அத்தி வரதர்: வரலாறு எழுப்பும் விடையற்ற வினாக்கள்!](https://minnambalam.com/k/2019/07/13/17)**
**[அத்தி வரதர்: வரலாறு எழுப்பும் விடையற்ற வினாக்கள்! – 2](https://minnambalam.com/k/2019/07/13/54)**
�,”