Dபுரோ கபடி: இன்று தொடக்கம்!

Published On:

| By Balaji

கபடி ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புக்குரிய புரோ கபடி தொடரின் 7ஆவது சீசன் இன்று (ஜூலை 20) ஐதராபாத்தில் தொடங்குகிறது.

2014ஆம் ஆண்டு முதல் நடைபெற்றுவரும் இந்தத் தொடரில் மும்பை, பாட்னா, அகமதாபாத், சென்னை, டெல்லி, பெங்களூரு, கொல்கத்தா, புனே, ஜெய்ப்பூர், பஞ்ச்குலா, நொய்டா ஆகிய இடங்களில் இந்தப் போட்டி நடைபெறுகிறது.

12 அணிகள் மோதும் இந்த தொடரின் முதல் லீக் ஆட்டத்தில் தெலுங்கு டைட்டன்ஸ் – மும்பை அணிகள் பலப் பரீட்சை நடத்துகின்றன. 8.30 மணிக்கு நடைபெறும் மற்றொரு ஆட்டத்தில் பெங்களூரு புல்ஸ், பாட்னா பைரட்ஸ் அணிகள் மோதுகின்றன.

ஒவ்வொரு அணியும் லீக் சுற்றில் மற்ற அணிகளுடன் தலா இரண்டு முறை மோத வேண்டும். இதில் முதலிரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள் நேரடியாக அரையிறுதிக்கு முன்னேறும். மற்ற இரண்டு அணிகள் எலிமினேட்டர் சுற்று மூலம் தேர்வு செய்யப்படும். அக்டோபர் 19ஆம் தேதி இறுதிப் போட்டி நடைபெறவுள்ளது.

**

மேலும் படிக்க

**

**[டிஜிட்டல் திண்ணை: சசிகலா நடத்திய மெகா குடும்ப பஞ்சாயத்து!](https://minnambalam.com/k/2019/07/19/85)**

**[BIG BOSS 3: ஸ்மோக்கிங் ரூம் பஞ்சாயத்து!](https://minnambalam.com/k/2019/07/19/38)**

**[ அடிக்கப் பாய்ந்த சத்யா – அடக்கிய சேகர்பாபு: சட்டமன்ற காட்சிகள்!](https://minnambalam.com/k/2019/07/18/25)**

**[அத்தி வரதர்: வரலாறு எழுப்பும் விடையற்ற வினாக்கள்!](https://minnambalam.com/k/2019/07/13/17)**

**[அத்தி வரதர்: வரலாறு எழுப்பும் விடையற்ற வினாக்கள்! – 2](https://minnambalam.com/k/2019/07/13/54)**

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share