நடப்பு நிதியாண்டில் ஏப்ரல் முதல் ஜனவரி வரையிலான காலகட்டத்தில் நேரடி வரி வருவாய் 23.9 சதவிகிதமும் மறைமுக வரி வருவாய் 10.79 சதவிகிதமும் அதிகரித்துள்ளது.
நடப்பு நிதியாண்டின் பொருளாதார வளர்ச்சியை பாதித்த முக்கியமான காரணிகளில் ஒன்றான பணமதிப்பழிப்பு, நேரடி மற்றும் மறைமுக வரி மூலம் கிடைக்கும் வருவாயிலும் சரிவை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்பட்டது. எனினும் ஜனவரி வரையில் நேரடி / மறைமுக வரி மூலம் கிடைத்த மொத்த வருவாய் ரூ.12.85 லட்சமாக அதிகரித்துள்ளது. இது 2016 – 17 ஆண்டுக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்த இலக்கான ரூ.16.99 லட்சம் கோடியில் 76 சதவிகிதமாகும்.
ஏப்ரல் முதல் ஜனவரி வரையிலான காலகட்டத்தில் நேரடி மற்றும் மறைமுக வரி மூலம் கிடைத்த வருவாய் 16.9 சதவிகிதம் அதிகரித்துள்ளது. நேரடி வரி வசூல் 5.8 லட்சம் கோடியாகவும், மறைமுக வரி வசூல் ரூ.7.03 லட்சம் கோடியாகவும் அதிகரித்துள்ளது. இதில் நேரடி வரி வருவாய் என்பது, கார்பரேட் மற்றும் தனிநபர் வருவாயை உள்ளடக்கியது. அதேபோல மறைமுக வரி வருவாய் என்பது கலால் வரி, சுங்க வரி மற்றும் சேவை வரி ஆகியவற்றை உள்ளடக்கியது.�,