dநூற்றாண்டு கொண்டாடும் வங்காள சினிமா!

Published On:

| By Balaji

இந்திய சினிமாவில் தரமான படைப்புகள் மூலம் மிகச்சிறந்த பங்களிப்பை அளித்துவரும் வங்காள சினிமா நூறாவது ஆண்டில் அடியெடுத்துவைத்துள்ளது.

கொல்கத்தா சர்வதேச திரைப்படவிழா இந்த ஆண்டு நவம்பர் 10ஆம் தேதி தொடங்கி நவம்பர் 17ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. மேற்கு வங்க அரசு 24ஆவது ஆண்டாக இந்த திரைப்பட விழாவை நடத்தி வருகிறது.

சத்யஜித் ரே, ரித்விக் கட்டக், மிருணாள் சென் உள்ளிட்ட பல முக்கிய ஆளுமைகளை வங்காள சினிமா உருவாக்கியுள்ளது. நூற்றாண்டைக் கொண்டாடும் இந்த ஆண்டில் சர்வதேச திரைப்படவிழாவை சிறப்பாக நடத்த மேற்கு வங்காள அரசு முடிவெடுத்துள்ளது.

திரைப்பட விழாவில் ஒவ்வொரு ஆண்டும் குறிப்பிட்ட ஒரு நாட்டின் படங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும். அந்த வகையில் இந்த ஆண்டு ஆஸ்திரேலியப் படங்கள் அதிகளவில் திரையிடப்படுகின்றன. உலகம் முழுவதும் பிரபலமான திரைக்கலைஞர்களும் வருகை தருகின்றனர்.

ஈரானிய இயக்குநர் மஜித் மஜிதி திரைப்படவிழாவின் தொடக்க நிகழ்வில் கலந்துகொள்கிறார். ஆஸ்திரேலிய படத்தொகுப்பாளர் ஜில் எலிசபெத் பில்காக், ஆஸ்திரேலிய இயக்குநர் பிலிப் நாய்ஸ் ஆகியோரும் வருகை தருகின்றனர்.

அமிதாப் பச்சன், ஜெயா பச்சன் ஆகியோர் இந்த ஆண்டும் கலந்துகொள்ளவுள்ளனர். மாநிலத்தின் விளம்பரத் தூதரான ஷாருக் கானோடு சஞ்சய் தத், ஷர்மிளா தாகூர், மகேஷ் பட் ஆகியோரும் தொடக்க நிகழ்ச்சியில் பங்கெடுக்கின்றனர்.�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share