புத்தாண்டு கொண்டாடுறேன்னு நல்லா குடிச்சிட்டு புதிய இந்தியாவில் குழந்தை போல வாந்தியெடுத்த அன்பர்களே, நண்பர்களே. இனி குடிக்கவே மாட்டேன் என்று சத்தியபிரமாணம் எடுத்துக்கொண்ட நல் உள்ளங்களே. அனைவருக்கும் இந்திய குடிமகனான அப்டேட் குமாரின் புத்தாண்டு வாழ்த்துக்கள். நியூ இயருக்கு நம் நெட்டிசன்களின் மனநிலை எப்படியென கீழே காணுங்கள்
\@Manoj B
ட்ரெயினுக்கு டிக்கெட்டுக்கு பத்து ரூவா காசு இல்லை…
அயம் ஹேவிங் 2000 ஒன்லி…
மட்டையாகி படுத்திருந்த நண்பனின் பாக்கெட்டில் பத்து ரூவா ஆட்டைய போட்டுட்டு வந்துட்டன்…
திஸிஸ் டிஜிட்டல் இந்தியா…
தேங்கூ…
ஆப்பி நூயர்//
\@Rajiv Parthiban
நியு இயர்ன்னா குடிச்சே ஆகணுமா?
என வியாக்யான ஸ்டேட்டஸ் போட்டுவிட்டு அருகிலிருந்த பாரினுள் நுழைந்தார் அந்த போராளி//
\@Sivakumar
நான் சுத்த தமிழன் என்பதால் எனக்கு யாரும் ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள் சொல்லவேண்டாம்.
உங்கள் அனைவருக்கும் Happy new year//
\@அ.ப. இராசா
அஞ்சாதே படத்தில், திறமை இல்லாத நரேன், பதவிக்கு வந்த பிறகு அதிரடி நடவடிக்கைகளால் பொறுப்பான போலீசாக நடந்து கொள்வார். அது மாதிரி சசிகலா முதல்வராகி, அடுத்த நான்கு ஆண்டுகளில், அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப் போகிறார். அவரை திட்டிய நாம் எல்லாம், ஆஹா ஓஹோ என புகழப் போகிறோம் என்றே தோன்றுகிறது//
\@Akiran Moses
விழாக்களும் பண்டிகைகளும் முதலாளிகளின் வேட்டை நாய்கள் .
-காரல் மார்க்ஸ்//
\@Sakthi Saravanan
சின்னம்மா is a word
கபி கபி சித்தப்பு is an emotion!//
\@டாமினிக் டொரேட்டோ
இன்னைக்கு கோவிலுக்கு போனா சக்கரை பொங்கலும், அழகான பொண்ணுங்கள சைட் அடிக்குற பாக்கியமும் கிடைக்கும்.
#வெரிஃபைட்//
\@Raj Arun
புது வருசத்துக்கு எதாவது சொல்லனுமா
நீங்க நீயா இருங்க//
\@Karunakaran B
பசிக்கல என்பது கூட சசிகலா என்றே கேட்கிறது. சின்னம்மா ஆட்சியில் பட்டினியில்லா புதிய தமிழகம் பிறக்கப்போகிறது.//
\@Saba Sabastin Sabas
வெளிநாட்டு டாக்டர்கள் பொய் சொல்ல மாட்டார்கள் # சி.ஆர்.சரஸ்வதி.
ஆமா வெள்ளயா இருக்குறவன் பொய் சொல்லாமாட்டான்னு வடிவேலு சொல்லிருக்காப்டி //
\@thoatta
செய்வீர்களா? நீங்கள் செய்வீர்களா?’லாம் இந்த குரல்ல கேட்டா….//
\@Kozhiyaar
போன வருடத்திற்கும் இந்த வருடத்திற்கும் தலைமயிர் கொஞ்சம் மேலேறியதும், வயிறு கொஞ்சம் கீழிறங்கியதையும் தவிர பெரிய மாற்றமில்லை!!!//
\@ஆல்தோட்டபூபதி
அம்மாவுக்கு நோபல் பரிசை தருவதை விட, நோபல் பரிசுக்கு அம்மா பெயரை வைக்க சொல்லி தீர்மானம் இயற்றி இருக்கலாம்//
\@jui dey
நீதானா அந்தக்குயில்?
சின்னத்தா//
\பூபதி
புதுசா பொறந்த இந்தியாவை பத்தி சம்மூவ ஆர்வலர் RJ பாலாஜி எதாவது கருத்து தெரிவிச்சார//
\@Nelson Xavier
கடந்த மாதம் ஒரு வாட்ஸ்ஆப் குரூப்பில் யாரோ சேர்த்து விட்டார்கள். 113 பேர் இருக்கிறார்கள். தினமும் காலை வணக்கம், இரவு வணக்கம் மெசேஜ்தான். நேற்றும் புத்தாண்டு வாழ்த்துக்களைப் பறிமாறிக் கொண்டார்கள். அவர்கள் யார் ? ஏன் என்னை இணைத்தார்கள் என்றெல்லாம் தெரியவில்லை. வணக்கம் தவிர இதுவரை வேறு எதுவும் பேசிக் கொள்வதில்லை. ஒருமாதம் கழித்து, இன்று “பூப்போட்ட காலை வணக்கம் மெசேஜ் ஒன்று அனுப்பினேன். பத்து பதினைந்து பேர் காலை 11.30க்கு கூட “காலை வணக்கம்” திருப்பிச் சொல்கிறார்கள். நெகிழ்ச்சியாக இருந்தது. அதிலும் இருவர் “நற்காலை வணக்கம் சகோ” என அனுப்பியது இதமாக இருந்தது. மிகவும் புத்துணர்ச்சியாக இருக்கிறது. இப்படி ஒரு உலகம் நம்மிடம்தான் இத்தனைகாலமும் இயங்கி வருகிறது. நாம்தான் அறியாமல் இருந்துவிட்டோம். ரத்த பூமியாக இருக்கும் மற்ற குரூப்புகளுக்கு மத்தியில் இதுஒன்றுதான் இப்போதைக்கு ஆறுதல். 2017 ஆம் ஆண்டு இந்த வாட்ஸ்ஆப் குரூப்பை போல வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள்.//
-லாக் ஆஃப்
�,”