இந்தியர்கள் தங்களது வீடுகளில் 25,000 டன் அளவிலான தங்கத்தைச் சேர்த்து வைத்திருப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.
உலக தங்க கவுன்சில் சார்பாக, இந்தியக் குடும்பங்கள் எவ்வளவு தங்கத்தைச் சேமித்து வைத்துள்ளன என்ற ஆய்வு இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் மேற்கொள்ளப்பட்டது. அப்போது, இந்தியக் குடும்பங்கள் 23,000 டன் முதல் 24,000 டன் வரையிலான தங்கத்தைச் சேமித்து வைத்திருப்பாகக் கண்டறியப்பட்டது. தற்போதைய நிலையில் தங்கத்தின் சேமிப்பு அளவு 25,000 டன்களைத் தாண்டியிருக்கும் என்று உலக தங்க கவுன்சில் நிர்வாக இயக்குநரான சோமசுந்தரம், *ஃபினான்சியல் எக்ஸ்பிரஸ்* ஊடகத்திடம் தெரிவித்துள்ளார்.
இந்த அளவானது இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுமார் 40 சதவிகிதம் ஆகும். நடப்பு 2019ஆம் ஆண்டில் இந்தியாவில் தங்கத்துக்கான தேவை 750 முதல் 850 டன் வரையில் இருக்கும் என்று உலக தங்க கவுன்சில் மதிப்பிட்டுள்ளது. 2018ஆம் ஆண்டில் தங்கத்துக்கான தேவை 760 டன்னாக இருந்தது. ரூபாய் மதிப்பு உயர்வு மற்றும் சர்வதேசச் சந்தையில் தங்கம் விலைச் சர்வு போன்ற காரணங்களால் ஜனவரி – மார்ச் காலாண்டில் இந்தியாவின் தங்கத்துக்கான தேவை 5 சதவிகிதம் உயர்ந்திருந்ததாகவும் சோமசுந்தரம் கூறுகிறார். ஜனவரி – மார்ச் காலாண்டில் தங்கத்தின் தேவை 159 டன்னாக இருந்தது.
சர்வதேச அளவில் அதிகமான தங்கத்தைச் சேமித்து வைத்திருக்கும் குடும்பங்களைக் கொண்ட நாடாக இந்தியா முன்னிலையில் இருப்பதாக உலக தங்க கவுன்சில் கூறுகிறது.
.
.
**
மேலும் படிக்க
**
.
. **
[வளர்மதியிடம் சீறிய எடப்பாடி](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/21/27)
**
.
**
[எக்சிட் போல்: பிரபல ஊடகங்களின் சறுக்கல்!](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/21/56)
**
.
**
[தெற்கில் பாஜகவைப் பின்னுக்குத் தள்ளுமா காங்கிரஸ்?](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/21/32)
**
.
**
[சோனியா திடீர் உற்சாகம்: காரணம் என்ன?](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/20/16)
**
.
**
[டிஜிட்டல் திண்ணை: ஸ்டாலினுக்கு அமித் ஷா தூது!](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/20/82)
**
.
.
�,”