dடிவில்லியர்ஸுக்கு விராட் கோலி ஆதரவு!

Published On:

| By Balaji

உலகக் கோப்பை அணித் தேர்வுச் சர்ச்சையில் சிக்கியுள்ள தென்னாப்பிரிக்க அணியின் முன்னாள் வீரர் ஏபி டிவில்லியர்ஸுக்கு இந்திய கேப்டன் விராட் கோலி ஆதரவு தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டின் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் டூபிளசிஸ் தலைமையிலான தென்னாப்பிரிக்க அணி மிக மோசமாகத் தோல்வியடைந்து தொடரை விட்டு வெளியேறியுள்ளது. ஒருமுறையாவது உலகக் கோப்பையை வெல்ல வேண்டும் என்ற தென்னாப்பிரிக்க அணியின் கனவு இன்னும் நனவாகவில்லை. இத்தொடரில் தென்னாப்பிரிக்க அணியின் தோல்விக்கு முன்னாள் அதிரடி வீரர் டிவில்லியர்ஸ் அணியில் இல்லாததும் ஒரு காரணமாகக் கூறப்படுகிறது. 2018ஆம் ஆண்டிலேயே தனது ஓய்வு அறிவிப்பை வெளியிட்ட டிவில்லியர்ஸ் மீண்டும் அணியில் சேருவதற்குக் கோரிக்கை விடுத்ததாகவும், அதை அணி நிர்வாகம் மறுத்துவிட்டதாகவும் சர்ச்சை எழுந்துள்ளது. அதேபோல, டிவில்லியர்ஸ் தனது சுயநலத்துக்காக முடிவுகளை மாற்றிக்கொள்வதாகவும் குற்றம்சாட்டப்பட்டது.

தன் மீதான குற்றச்சாட்டுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக டிவில்லியர்ஸ் ஜூலை 12ஆம் தேதி தனது ட்விட்டர் பதிவில் விளக்கமளித்திருந்தார். இந்த நிலையில் டிவில்லியர்ஸ் மீதான சர்ச்சைக்குக் கண்டனம் தெரிவித்துள்ள இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி, டிவில்லியர்ஸுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். இதுகுறித்து டிவில்லியர்ஸின் இன்ஸ்டகிராம் பக்கத்தில் விராட் கோலி இட்டுள்ள பதிவில், “எனது சகோதரா, நான் அறிந்த மிகவும் நேர்மையான உறுதியான மனிதர் நீங்கள்தான். இப்போது உங்களுக்கு எதிராக எழுந்துள்ள சர்ச்சை துரதிர்ஷ்டவசமாக உள்ளது. நாங்கள் எப்போதுமே உங்களுக்கு ஆதரவாக இருப்போம். உங்கள் மீது நம்பிக்கை உள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

தனது மனைவி அனுஷ்கா ஷர்மாவும் டிவில்லியர்ஸுக்கு ஆதரவு தெரிவிப்பதாக விராட் கோலி கூறியுள்ளார்.

சமீபத்தில் ஓய்வை அறிவித்த இந்திய அணியின் முன்னாள் வீரர் யுவராஜ் சிங்கும் டிவில்லியர்ஸுக்கு ஆதரவுக் கரம் நீட்டியுள்ளார். தனது நண்பரும் ஜாம்பவானுமான டிவில்லியர்ஸ், கிரிக்கெட் விளையாட்டில்தான் சந்தித்த மிகச்சிறந்த குணம் படைத்தவர் என்று கூறியுள்ள யுவராஜ் சிங், “நீங்கள் மிகச் சிறந்த மனிதர். நீங்கள் இல்லாமல் தென்னாப்பிரிக்க அணியால் உலகக் கோப்பையை வெல்வதற்கான வாய்ப்பே இல்லை. உங்களை அணியில் வைத்திருக்காதது உங்களது நாட்டுக்கு மிகப்பெரிய இழப்பாகும். தலைசிறந்த வீரர் மீதுதான் இதுபோன்ற பெரிய சர்ச்சைகள் வருகின்றன. எங்களுக்குத் தெரியும் நீங்கள் ஒரு பண்புள்ள மனிதர் என்று” எனத் தனது ஆதரவைத் தெரிவித்துள்ளார்.

**

மேலும் படிக்க

**

**[அவசரப்பட்டுவிட்டேனோ? புலம்பிய தங்கம்](https://minnambalam.com/k/2019/07/13/18)**

**[நிர்வாகிகள் விலகுவதை தடுக்க…சசிகலா போட்ட பட்ஜெட்!](https://minnambalam.com/k/2019/07/13/7)**

**[டிஜிட்டல் திண்ணை: திமுக எம்.எல். ஏ.க்களுக்கு லைஃப் செட்டில்மென்ட்- கூல் எடப்பாடி](https://minnambalam.com/k/2019/07/13/72)**

**[அத்தி வரதர்: வரலாறு எழுப்பும் விடையற்ற வினாக்கள்!](https://minnambalam.com/k/2019/07/13/17)**

**[ மோடிக்கு தயாநிதியை தூது அனுப்பினாரா ஸ்டாலின்?](https://minnambalam.com/k/2019/07/12/24)**

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share