Dசென்னையில் ஜல்லிக்கட்டு!

public

சென்னையில் வரும் ஜனவரி 6ஆம் தேதி ஜல்லிக்கட்டு போட்டி நடத்தவுள்ளதாக ஜல்லிக்கட்டு பேரவை நிறுவனர் அமர்பிராசத் ரெட்டி கூறியுள்ளார்.

கடந்த ஜனவரி மாதம் பெண்கள், இளைஞர்கள் என அனைவரும் சமூக வலைத்தளம் மூலம் ஒன்றிணைந்து போராடி தமிழகத்தின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டை மீட்டெடுத்தனர். பின் கடந்த சில தினங்களாக ஆங்காங்கே ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்று வருகிறது. ஜல்லிக்கட்டு போராட்டத்தின் மையமாக சென்னை திகழ்ந்தது. மெரினா போராட்டம் உலக அளவில் கவனத்தை ஈர்த்தது. எனவே, சென்னையிலும் ஜல்லிக்கட்டு போட்டி நடத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்து வந்தது. இந்நிலையில் சென்னை மக்களும் காணும் வகையில் கோவளத்தில் வரும் 2018. ஜனவரி-6 ஆம் தேதி ஜல்லிக்கட்டு நடவுள்ளதாக ஜல்லிக்கட்டு பேரவைத் தலைவர் பி.ராஜசேகர் மற்றும் நிறுவனர் அமர்பிராசத் ரெட்டி ஆகியோர் நேற்று ஆகஸ்ட்-4 ஆம் தேதி தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து அவர்கள் கூறியதாவது,” பல போராட்டங்களை கடந்து ஜல்லிக்கட்டை மீட்டெடுத்தோம் . சென்னையை அடுத்த கோவளத்தில் வரும் ஜனவரி-6 ஆம் தேதி ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறவுள்ளது. இதற்காக, மதுரை உள்ளிட்ட 15 மாவட்டங்களில் இருந்து 300க்கும் மேற்பட்ட காளைகள் வரவழைக்கப்படவுள்ளன. ,இதில் கை தேர்ந்த மாடு பிடி வீரர்களைத் தேர்ந்தெடுத்து இந்த ஜல்லிக்கட்டு போட்டி நடத்தவுள்ளதாகவும், மாடு பிடி வீரர்களுக்கு அளிப்பதற்காக ரூ.50 லட்சம் நிர்ணயித்துள்ளதாகவும், இந்தப் போட்டி நடத்துவதற்காக 100 ஏக்கர் நிலம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாகவும் “கூறியுள்ளனர். ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவதற்குக் காவல் துறையிடம் அனுமதி பெற தனிச் சட்ட குழு அமைக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளனர்.

மேலும் இந்தப் போட்டியை காண வரும் மக்களுக்குக் கட்டணம் ஏதும் கிடையாது. ஆனால் போட்டியை காண விருப்பமுள்ளவர்கள் விரைவில் ஜல்லிக்கட்டு பேரவை சார்பில் அறிவிக்கப்படவுள்ள இணையதளத்தில் பதிவு செய்து நுழைவு சேட்டை பெற்றுக்கொள்ளலாம் எனவும், இதற்காகப் பிரத்தியேக கைப்பேசி எண் கொண்டுவரவுள்ளதாகவும், அதற்கு மிஸ்டு கால் கொடுத்து முன்பதிவு செய்துகொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published.