ஹைதராபாத்தில் சர்வதேச வேளாண் சுற்றுச்சூழல் மாநாடு நவம்பர் 25ஆம் தேதியில் தொடங்கவுள்ளதாக ஆரண்யா வேளாண்மை அமைப்பு அறிவித்துள்ளது.
அரசு அல்லாத தனியார் அமைப்பான ஆரண்யா வேளாண்மை அமைப்பு, 13வது சர்வதேச வேளாண் சுற்றுச்சூழல் மாநாட்டை நடத்தத் திட்டமிட்டுள்ளது. அதன்படி இந்த மாநாடு தெலுங்கானாவில் உள்ள பேராசிரியர் ஜெயசங்கர் தெலங்கானா வேளாண் பல்கலைக் கழகத்தின் அரங்கத்தில் நவம்பர் 25 மற்றும் 26ஆம் தேதிகளில் நடைபெறவுள்ளது. அதனைத் தொடர்ந்து நவம்பர் 27 முதல் டிசம்பர் 2 வரையில் சங்கரெட்டி மாவட்டத்தில் உள்ள விவசாய நிலங்கள் பார்வையிடப்படுகின்றன.
இதுகுறித்து ஆரண்யா வேளாண்மை அமைப்பின் துணை நிறுவனரான பத்மா கொப்புலா கூறுகையில், இந்தச் சர்வதேச வேளாண் சுற்றுச்சூழல் மாநாட்டில், விவசாயத்தைப் பற்றிய புதிய உத்திகள், கல்வித்தரம், பிராந்திய மற்றும் உலகளாவிய வேளாண் சுற்றுச்சூழல் ஆராய்ச்சிகள் உள்ளிட்டவை விவாதிக்கப்படவுள்ளது” என்றார். மேலும் இந்த மாநாட்டில் விவசாயத்தின் சமுதாயப் பொறுப்பு, வேளாண் சுற்றுச்சூழல் பற்றிய அடிமட்ட அலசல், வேளாண்மையில் பெண்களின் முன்னேற்றம், சுற்றுச்சூழல் மற்றும் பருவகாலங்களுடன் ஒன்றுவது பற்றி விவாதிக்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.�,”