நமது நெல்லைக் காப்போம் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ‘நெல்’ ஜெயராமன் அவர்களின் வாழ்க்கையை படமாக எடுப்பதாக சசிகுமார் தெரிவித்துள்ளார்.
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியை சேர்ந்தவர் இரா. ஜெயராமன். விவசாயியான இவர் இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வாருடன் இணைந்து பாரம்பரிய நெல் ரகங்களை விவசாயிகள் விளைவிக்க வேண்டும் என்று விவசாயிகளிடையே தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வந்தவர்.
மேலும் இவர், விதைப் பாதுகாப்பு, இயற்கை விவசாயம் குறித்தும் பல்வேறு வேளாண் பணிகள் குறித்தும் விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொண்டார். பாரம்பரிய விதை நெல்களைக் காக்கும் பணியில் தன்னை அர்பணித்து நெடுங்காலமாகச் செயல் பட்டு சுமார் 174 வகை பாரம்பரிய நெல்களை மீட்டெடுத்துள்ளார். எனவே இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார் இவருக்கு “நெல்” எனப் பட்டம் கொடுத்தார். மேலும் மத்திய மற்றும் மாநில அரசுகளால் விருது வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டுள்ளார்.
தோல் புற்று நோயினால் அவதிப்பட்டு வந்த இவர் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் உயிரிழந்தார். இது மக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில் இவரது ஆய்வுக் குறிப்புகளை 12 ஆம் வகுப்பு தாவரவியல் பாடப்பகுதியில் இணைத்து தமிழக அரசு கெளரவப்படுத்தி உள்ளது.
இச்செய்தியை அறிந்த இயக்குநர் சசிகுமார் தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்திருந்தார். மேலும் டிவிட்டரில் “இன்று பாடமாக வந்துள்ள உங்களின் உழைப்பும் அர்ப்பணிப்பும் நாளை படமாக வரும். அதற்கான பணியில் நாங்கள்” என்று பதிவிட்டிருந்தார். இதில் கத்துக்குட்டி படத்தின் இயக்குநர் இரா. சரவணனையும் டேக் செய்திருந்தார். மேலும் சசிகுமார் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார் எனவும் தெரிகின்றது.
இப்படம் பற்றிய அடுத்தகட்ட அதிகாரபூர்வ தகவல்கள் இன்னும் சில நாட்களில் வெளியாகும் என தெரிகிறது.
.
.
**
மேலும் படிக்க
**
.
.
**
[ராஜ்யசபா: தங்கத்துக்கு அதிமுகவின் புதிய ஆஃபர்!](https://minnambalam.com/k/2019/05/31/20)
**
.
**
[மோடி அமைச்சரவையில் சமூக நீதி எங்கே? – நீதிபதி கேள்வி!](https://minnambalam.com/k/2019/05/31/44)
**
.
**
[டிஜிட்டல் திண்ணை: ஆட்சிக் கவிழ்ப்பு -ஸ்டாலினுக்கு ஸ்பீடு பிரேக் போட்டது யார்?](https://minnambalam.com/k/2019/05/30/79)
**
.
**
[மத்திய அமைச்சரவை: தவிர்க்கப்பட்ட தமிழ்நாடு!](https://minnambalam.com/k/2019/05/31/24)
**
.
**
[மத்திய அமைச்சரவையில் தமிழகம்: மற்ற ஊடகங்களும் மின்னம்பலமும்!](https://minnambalam.com/k/2019/05/31/19)
**
.
.
�,”