நான்கு கேமராக்களைக் கொண்ட உலகின் முதல் ஸ்மார்ட்போனை சாம்சங் நிறுவனம் இந்தியாவில் நேற்று (நவம்பர் 20) அறிமுகம் செய்துள்ளது.
இந்தியாவில் ஸ்மார்ட்போன் விற்பனையில் முன்னணியில் இருக்கும் சாம்சங் நிறுவனம், கேலக்ஸி A9 ஸ்மார்ட்போனில் முதல்முறையாக நான்கு ரியர் கேமராக்களை அறிமுகம் செய்தது. இந்த போன் கடந்த மாதம் மலேசியாவில் நடைபெற்ற சாம்சங் கூட்டத்தின்போது வெளியிடப்பட்டது. உலக அளவில் முதல் முறையாக நான்கு ரியர் கேமராக்களுடன் வெளிவந்ததால் இந்த ஸ்மார்ட்போனுக்கு வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. இதனையடுத்து அந்நிறுவனம் தற்போது இந்த ஸ்பெஷல் ஸ்மார்ட்போனை இந்தியாவில் நேற்று வெளியிட்டுள்ளது.
இதன் வெளியீடு குறித்து சாம்சங் நிறுவனத்தின் உலகளாவிய துணைத் தலைவரான அசிம் வார்ஸி, இந்த ஆண்டில் இது எங்களது கடைசி வெளியீடாகும். இந்தியாவில் நான்கு கேமராக்களைக் கொண்டு வெளிவரும் முதல் ஸ்மார்ட்போன் இது” என்று கூறியுள்ளார்.
இந்த ஸ்மார்ட்போனின் பின்புறத்தில் 4 கேமராக்கள் மட்டுமின்றி 4 சென்சார்களும் அடங்கியிருப்பதால் ஒரே நேரத்தில் நான்கு விதவிதமான புடைப்படத்தை இதனால் எடுக்க முடியும். மேலும், ஒரே ஃபிரேமில் அதிகப்படியான இடத்தை உள்ளடக்கம் செய்வதற்கென்றே பிரத்தியேகமாக Ultrawide lens இதில் பொருத்தப்பட்டுள்ளது. இதில் சாதாரணப் புகைப்படங்களைப் போலவே பனோரமா புகைப்படங்களையும் தெள்ளத் தெளிவாக எடுக்க முடியும் என்று சாம்சங் நிறுவனம் அறிவித்துள்ளது. Dolby Atmos audioவை ஏற்கும் வண்ணம் அமைக்கப்பட்டுள்ள இந்த ஸ்மார்ட்போன் கருப்பு, நீலம் மற்றும் பிங்க் ஆகிய 3 நிறங்களில் கிடைக்கின்றன.
இந்தியாவைப் பொறுத்தவரை 6 GB RAM, 128 GB ஸ்டோரேஜ் வசதி கொண்ட ஸ்மார்ட்போன் ரூ. 36,990க்கும், 8 GB RAM , 128 GB ஸ்டோரேஜ் வசதி கொண்ட ஸ்மார்ட்போன் ரூ. 39,990க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
முன்னதாக சாம்சங் நிறுவனம் மூன்று கேமராக்களுடன் கூடிய கேலக்ஸி A7 மாடலை வெளியிட்டிருந்தது. தற்போது அறிமுகமாகியுள்ள இந்த கேலக்ஸி A9 நவம்பர் 29 முதல் விற்பனைக்கு வரவுள்ளது.
�,”