ஐபிஎல் தொடர் தொடங்கப்படுவதற்கு முன்னர் இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் உலகக் கோப்பைத் தொடரை மனதில் கொண்டு விளையாடவேண்டும் என்று விராட் கோலி உள்ளிட்டோர் அறிவுறுத்தினர். ஆனால் இந்தத் தொடரில் பங்கேற்று ஆடியதன் மூலம் ஆல்ரவுண்டர் கேதர் ஜாதவ் உலகக் கோப்பைத் தொடரில் விளையாட முடியாமல் போகும் சூழல் நிலவியது. தற்போது கேதர் ஜாதவ்க்கு தொடரில் பங்கேற்க கிரீன் சிக்னல் கிடைத்துள்ளது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடிய கேதர் ஜாதவ், மே 5ஆம் தேதி பஞ்சாப்புக்கு எதிரான ஆட்டத்தில் 14ஆவது ஓவரில் பந்தைத் தடுக்க முற்பட்ட போது இடது தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது. இதனால் அவர் உடனடியாக வெளியேறினார். தொடர்ந்து அவரால் ப்ளே ஆப் சுற்றில் விளையாடமுடியாமல் போனது.
உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் இடம்பெற்றிருந்த கேதர் ஜாதவ் காயம் காரணமாக பங்கேற்பாரா என்ற கேள்வி எழுந்தது.
இந்திய கிரிக்கெட் அணியின் பிசியோதெரபிஸ்ட் பேட்ரிக் பர்ஹர்ட் கேதர் ஜாதவ் குணமடைய தீவிர பயிற்சியளித்துவந்தார். கடந்த வியாழன் (மே 16) அன்று அவருக்கு நடைபெற்ற உடல் தகுதி சோதனையில் கேதர் ஜாதவ் குணமடைந்துள்ளார் என தெரிய வந்துள்ளது.
இந்நிலையில் மே 22ஆம் தேதி இங்கிலாந்து செல்லும் இந்திய அணியினருடன் கேதரும் செல்ல உள்ளார். இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை இந்திய கிரிக்கெட் வாரியம் இன்று வெளியிடவுள்ளது.
59 ஒரு நாள் போட்டிகளில் பங்கேற்றுள்ள கேதர் ஜாதவ் 1174 ரன்கள் சேர்த்துள்ளார். இதில் இரு சதங்களும், ஐந்து அரை சதங்களும் அடங்கும். பந்து வீச்சில் 27 விக்கெட்டுகளை அவர் கைப்பற்றியுள்ளார்.
.
.
**
மேலும் படிக்க
**
.
**
[விமர்சனம்: மிஸ்டர் லோக்கல்!](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/18/7)
**
.
**
[டிஜிட்டல் திண்ணை: கெஞ்சல், மிரட்டல்- கமல் வெளியிடாத ரகசியத் தகவல்!](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/17/84)
**
.
**
[ஸ்பெயின் ரசிகர்களைக் கவர்ந்த தனுஷ்](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/17/53)
**
.
**
[தினகரனுக்கு எடப்பாடி சொன்ன செய்தி!](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/17/27)
**
.
**
[இன அழிப்புப் போரில் இறந்தோருக்கு அஞ்சலி](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/18/24)
**
.
.
�,”