dகுரூப் 4 தேர்வு: அறிவிப்பாணை வெளியீடு!

Published On:

| By Balaji

தமிழகத்தில் காலியாக உள்ள 6,491 பணியிடங்களுக்கான குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்பாணையை டிஎன்பிஎஸ்சி இன்று (ஜூன் 14) வெளியிட்டுள்ளது.

இளநிலை உதவியாளர், கிராம நிர்வாக அலுவலர், தட்டச்சர் உள்பட குரூப் 4 பிரிவில் காலியாகவுள்ள 6 ஆயிரத்துக்கும் அதிகமான பணியிடங்களுக்கு இன்று (ஜூன் 14) முதல் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

குரூப் 4 தேர்வுக்கான கல்வித்தகுதி, வயது வரம்பு, தேர்வு பாடத்திட்டங்கள், விண்ணப்ப கட்டணம் பற்றிய முழுமையான அறிவிப்பு [டிஎன்பிஎஸ்சி](www.tnpsc.gov.in)இணையதளத்தில் வெளியாகியுள்ளது. தேர்வுக்கு விண்ணப்பிக்க ஜூலை 14ஆம் தேதி கடைசி நாளாகும். இதற்கான எழுத்துத் தேர்வு செப்டம்பர் 1ஆம் தேதி நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் www.tnpsc.gov.inஅல்லது tnpsc.exams.net அல்லது tnpsc.exams.in ஆகிய இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 2017ஆம் ஆண்டு 9351 பணியிடங்களுக்கு குரூப் 4 தேர்வு நடத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

**

மேலும் படிக்க

**

**[டிஜிட்டல் திண்ணை: எடப்பாடியை டென்ஷன் ஆக்கிய தினகரன்- வாய்ப்பூட்டு பின்னணி!](https://minnambalam.com/k/2019/06/13/76)**

**[மூடப்படும் அருவிகள்: கேரளத்தில் பண மழை!](https://minnambalam.com/k/2019/06/14/20)**

**[பாக்கியராஜ் அணிக்கு விஜயகாந்த் ஆதரவு!](https://minnambalam.com/k/2019/06/13/44)**

**[அதிமுக: அந்த 11 பேர் குழுவில் யார் யார்?](https://minnambalam.com/k/2019/06/13/22)**

**[பசங்கதான் பொண்ணுங்கள தெரிஞ்சிக்கணும்: அஜித்](https://minnambalam.com/k/2019/06/13/70)**

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share