dகிச்சன் கீர்த்தனா: வெந்தயப் பணியாரம்

Published On:

| By Balaji

உடலை உறுதிசெய்யும் பணியாரம்

கோயில்களில் இறைவனுக்குப் படைக்கப்படும் பணியாரங்கள் இனிப்பு சேர்த்தே செய்யப்பட்டிருக்கின்றன. கருப்பட்டி, பனைவெல்லம் சேர்க்கப்பட்டுப் பணியாரம் செய்யும் வழக்கம், காலம்காலமாக இருந்து வந்திருக்கிறது. கருப்பசாமி மற்றும் சில பெண் தெய்வங்களுக்கு படையல் போடுவதற்காகச் சுத்தமான நெய்யில் பெரிய பணியாரங்களாகச் சுட்டுப் படைப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். பல வகை பணியாரங்கள் இருந்தாலும் இந்த வெந்தயப் பணியாரம், உடலை உறுதிசெய்யும்.

**என்ன தேவை?**

பச்சரிசி – 200 கிராம்

உளுந்து – 6 டீஸ்பூன்

வெந்தயம் – ஒன்றரை டீஸ்பூன்

வெல்லம் – 200 கிராம்

ஏலக்காய் – 2

நெய் – 2 டீஸ்பூன்

தேங்காய்த் துருவல் – 10 டீஸ்பூன்

சோடா உப்பு – சிறிதளவு

எண்ணெய் – தேவையான அளவு

**எப்படிச் செய்வது?**

பச்சரிசி, உளுந்து, வெந்தயம் மூன்றையும் ஒன்றாகச் சேர்த்து 4 மணி நேரம் ஊறவைக்கவும். ஏலக்காயைப் பொடித்துக்கொள்ளவும். அடுப்பில் அடிகனமான பாத்திரத்தை வைத்து சிறிது தண்ணீர் ஊற்றிக் கொதிக்கவிடவும். இத்துடன் பொடித்த வெல்லம் சேர்த்துக் கொதிக்கவிட்டு கரைத்து வடிகட்டவும். ஊறிய அரிசி, உளுந்து, வெந்தயத்துடன் வெல்லம் கரைத்த தண்ணீர் ஊற்றி மையாக கிரைண்டரில் அரைக்கவும். மாவை வழித்தெடுத்து ஒரு பாத்திரத்தில் சேர்த்து 8 மணி நேரம் புளிக்கவிடவும். அடுப்பில் வாணலியை வைத்து, நெய் ஊற்றி தேங்காய்த் துருவல் சேர்த்து லேசாக வதக்கவும். இதை புளிக்கவைத்துள்ள மாவில் சேர்த்துக் கலக்கவும். இத்துடன் பொடித்த ஏலக்காய், சோடா உப்பு இரண்டையும் சேர்த்து பணியாரம் ஊற்றும் பதத்துக்குக் கரைத்து, பணியாரக் குழியில் ஊற்றி எண்ணெய் விட்டு இருபுறமும் வேகவைத்து எடுக்கவும்.

**என்ன பலன்?**

வெந்தயத்தில் நீர்ச்சத்து, புரதச்சத்து, கொழுப்புச்சத்து, மாவுச்சத்து, சுண்ணாம்புச்சத்து, உயிர்ச்சத்துகள் உள்ளன. வளரிளம் பெண்களின் ஆரோக்கியத்துக்கு வெந்தயம் முக்கிய பங்களிக்கிறது. வெந்தயத்தை நேரிடையாகவே உண்ணலாம் என்பது பலரின் பரிந்துரை. அப்படிச் சாப்பிட இயலாதவர்களுக்கு இந்த வெந்தயப் பணியாரம் உதவும்.

[நேற்றைய ரெசிப்பி: அவல் பணியாரம்](https://minnambalam.com/k/2019/06/12/1)

**

மேலும் படிக்க

**

**[டிஜிட்டல் திண்ணை: விரைவில் பொதுச் செயலாளர் தேர்தல்- ஓ.பன்னீர் சூசகம்](https://minnambalam.com/k/2019/06/12/74)**

**[பாஜக அழைப்பு: அலைபாயும் ஜி.கே.வாசன்](https://minnambalam.com/k/2019/06/12/20)**

**[சட்டமன்றக் கூட்டம்: எடப்பாடியின் அதிரடித் திட்டம்!](https://minnambalam.com/k/2019/06/12/25)**

**[ஒற்றைத் தலைமை பற்றி பேசவில்லை!](https://minnambalam.com/k/2019/06/12/46)**

**[வாரிசுகள் தோல்வியடைந்த வரலாறு](https://minnambalam.com/k/2019/06/12/22)**

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share