தமிழகத்தின் ஒவ்வொரு பகுதியிலும், ஒவ்வொரு வகை பணியாரம் கலாச்சார அடையாளமாக இருக்கிறது. செட்டிநாட்டில் அனைத்து விழாக்களிலும் பண்டிகைகளிலும் பணியாரம் தவறாது இடம்பெறும். பணியாரம் என்பது, தென்மாவட்ட மக்களின் விருப்பத்துக்குரிய உணவு. பருப்புப் பணியாரத்தை டெல்டா பகுதி மக்கள் விரும்பி உண்கிறார்கள். கிருஷ்ணகிரி மக்களுக்குப் பிடித்தது புட்டுப் பணியாரம். ஈழத்தமிழர்களுக்கு மிகவும் பிடித்தது பனங்காய்ப் பணியாரம். பிரத்யேகமாகச் செய்யப்படும் இந்த வாழைப்பூ பணியாரம் பலரின் விருப்ப உணவாகும்.
**என்ன தேவை?**
புழுங்கல் அரிசி – கால் கிலோ
பொடியாக நறுக்கிய வாழைப்பூ (மோரில் ஊறவைத்து பிழிந்துகொள்ளவும்)
கடலைப்பருப்பு, துவரம்பருப்பு – தலா ஒரு கப்
இஞ்சி – ஒரு துண்டு, மிளகு – ஒரு டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
காய்ந்த மிளகாய் – 2
தக்காளி – 1
நெய் – ஒரு கப் (சிறியது)
**எப்படிச் செய்வது?**
புழுங்கல் அரிசி, கடலைப்பருப்பு, துவரம் பருப்பு ஆகியவற்றை ஒரு மணி நேரம் ஊறவைத்துக் கொள்ளவும். இவற்றுடன் இஞ்சி, மிளகு, காய்ந்த மிளகாய், தக்காளி சேர்த்து அரைக்கவும். நெய்யில் வாழைப்பூவை வதக்கி மாவுடன் கலந்து தேவையான உப்பு சேர்த்து கரைத்துக் கொள்ளவும். பணியாரக் குழியில் நெய் விட்டு, மாவை ஊற்றி பொன்னிறமாக வேக விட்டு எடுக்கவும்.
வெங்காய சாம்பார் இதற்கு ஏற்ற சைட் டிஷ்.
**என்ன பலன்?**
வாழைப்பூவைக் கண்டால் சிலருக்கு மொறுமொறுப்பான வடை சுடத் தோன்றும். ஆனால், வடையைப் பொரித்தெடுக்க எண்ணெய் அவசியம் என்பதால் அந்த வடையைச் சாப்பிட சற்று தயங்குவார்கள். அப்படிப்பட்டவர்களுக்கு மாற்று, இந்த வாழைப்பூ பணியாரம். வாட்டி வதைக்கும் வெயிலால், பலருக்கு உடல் சூடு ஏற்படும். சிலருக்கு இயற்கையிலேயே உடல் சூடாக இருக்கும். அப்படிப்பட்டவர்கள் இந்தப் பணியாரத்தை வாரம் இருமுறை உண்டுவந்தால், உடல் சூடு தணியும்.
**
மேலும் படிக்க
**
**[டிஜிட்டல் திண்ணை: ஆட்சிக் கலைப்பு- ஸ்டாலினை குறிவைக்கும் வருமான வரித்துறை!](https://minnambalam.com/k/2019/06/14/65)**
**[தினகரன் தளபதிக்கு எடப்பாடி தூது: ஜெயக்குமார் எதிர்ப்பு!](https://minnambalam.com/k/2019/06/14/51)**
**[அதிமுக: அந்த 11 பேர் குழுவில் யார் யார்?](https://minnambalam.com/k/2019/06/13/22)**
**[மூடப்படும் அருவிகள்: கேரளத்தில் பண மழை!](https://minnambalam.com/k/2019/06/14/20)**
**[பாக்கியராஜ் அணிக்கு விஜயகாந்த் ஆதரவு!](https://minnambalam.com/k/2019/06/13/44)**
�,”