dகிச்சன் கீர்த்தனா: ஜவ்வரிசி பணியாரம்

Published On:

| By Balaji

சிங்களப் புத்தாண்டின்போது பணியாரம் முக்கியமான உணவாக இருக்கிறது. புத்தாண்டுக்குச் சில நாட்களுக்கு முன்பாகவே பணியாரம் மற்றும் தின்பண்டங்கள் செய்து புத்தாண்டு நாள் வழிபாட்டுக்காக மண்சட்டிகளில் பத்திரப்படுத்தும் வழக்கம் ஈழத்தமிழர்களிடமும் சிங்களவர்களிடமும் உள்ளது. புத்தாண்டுக்கான பணியாரம் மற்றும் தின்பண்டங்கள் பஞ்சாங்கத்தில் கணிக்கப்பட்ட நல்ல நேரத்திலேயே தயாரிக்கத் தொடங்க வேண்டும் என்ற வழக்கமும் சிங்களவரிடையே உள்ளது. அந்த நேரத்தை (எண்ணெய்ப் பாத்திரம் அடுப்பில் வைக்கும் நேரம்) சிங்களத்தில் ‘Thel Valan Lipa Thebeema Nekatha’ என்கிறார்கள். பண்டிகை நாட்களில் செய்யப்படும் ஜவ்வரிசி பாயசம் போல், இந்த ஜவ்வரிசி பணியாரத்துக்கும் தனி சிறப்புண்டு.

**என்ன தேவை?**

புழுங்கல் அரிசி, பச்சரிசி, ஜவ்வரிசி – தலா ஒரு கப்

இஞ்சி – ஒரு சிறிய துண்டு

பச்சை மிளகாய் – 1

கடுகு – ஒரு டீஸ்பூன்

நெய் – ஒரு கப் (சிறியது)

உப்பு – தேவையான அளவு

**எப்படிச் செய்வது?**

ஜவ்வரிசியைத் தனியாக ஊற வைக்கவும். புழுங்கல் அரிசி, பச்சரிசி இரண்டையும் ஒன்றாக ஊற வைத்து அரைக்கவும். இஞ்சி, பச்சை மிளகாயைப் பொடியாக நறுக்கவும். அரைத்த மாவுடன் ஊற வைத்த ஜவ்வரிசியைச் சேர்க்கவும். நெய்யில் கடுகு தாளித்து, இஞ்சி, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி, மாவுடன் கலந்து உப்பு சேர்க்கவும். பணியாரக் குழியில் நெய் தடவி, மாவை சிறு கரண்டியால் ஊற்றி, இருபுறமும் பொன்னிறமாக வேகவிட்டு எடுக்கவும்.முத்து முத்தாகப் பார்த்து ரசிப்பதற்கும், ருசிப்பதற்கும் ஏற்ற பணியாரம் இது.

**என்ன பயன்?**

மிக எளிதாக ஜீரணமாகக்கூடிய உணவுகளில் ஒன்று ஜவ்வரிசி. அதனால் ஜவ்வரிசியில் செய்த உணவுகளைத் தாராளமாகக் குழந்தைகளுக்கும் கொடுக்கலாம். நேரத்துக்குச் சாப்பிட முடியாமல் இருப்பவர்கள் இதைச் சாப்பிட்டால் போதும். நேரத்துக்குப் பசிக்க ஆரம்பிக்கும். எலும்புகளை ஆரோக்கியமாக்கும். மூட்டுவலியைக் குறைக்கும்.

[நேற்றைய ரெசிப்பி: வெந்தயப் பணியாரம்](https://minnambalam.com/k/2019/06/13/1)

**

மேலும் படிக்க

**

**[டிஜிட்டல் திண்ணை: எடப்பாடியை டென்ஷன் ஆக்கிய தினகரன்- வாய்ப்பூட்டு பின்னணி!](https://minnambalam.com/k/2019/06/13/76)**

**[அதிமுக: அந்த 11 பேர் குழுவில் யார் யார்?](https://minnambalam.com/k/2019/06/13/22)**

**[பாக்கியராஜ் அணிக்கு விஜயகாந்த் ஆதரவு!](https://minnambalam.com/k/2019/06/13/44)**

**[ரோஜாவுக்கு முக்கிய அரசு பதவி!](https://minnambalam.com/k/2019/06/13/11)**

**[பாஜக அழைப்பு: அலைபாயும் ஜி.கே.வாசன்](https://minnambalam.com/k/2019/06/12/20)**

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share