நாம் எத்தனையோ பல நல்ல விஷயங்களைப் பயன்படுத்துவதைச் சென்ற தலைமுறையோடு மிகவும் குறைத்துவிட்டோம். இந்தப் பட்டியலில் நாட்டுக் காய்கறிகளும் அடங்கும். குறிப்பாக கோவைக்காய். இதை நம் வீட்டுத் தோட்டத்திலேயேகூட பயிரிடலாம். இது சத்தில், சுவையில் மற்ற காய்கறிகளுக்குச் சற்றும் சளைத்தவை அல்ல.
**என்ன தேவை?**
கோவைக்காய் – 200 கிராம்
வெங்காயம் – ஒன்று
தக்காளி – ஒன்று
கடுகு – கால் டீஸ்பூன்
மிளகாய்த்தூள் – ஒரு டீஸ்பூன்
மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன்
எண்ணெய் – 2 டீஸ்பூன்
கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை – சிறிதளவு
உப்பு – தேவையான அளவு
**எப்படிச் செய்வது?**
கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்துக்கொள்ளவும். பின்பு பொடியாக நறுக்கிய வெங்காயம் மற்றும் தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும். பிறகு, நறுக்கிய கோவைக்காயைச் சேர்த்து மேலும் வதக்கவும். இதனுடன் மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து மூடி வேக வைக்கவும். நன்கு வெந்தவுடன் கொத்தமல்லித்தழை தூவி இறக்கிப் பரிமாறவும்.
[நேற்றைய ரெசிப்பி: பட்டர் புரொக்கோலி](https://www.minnambalam.com/k/2020/02/12/3)�,