dகிச்சன் கீர்த்தனா: கீரை – அவல் உப்புமா

Published On:

| By Balaji

நம் முன்னோர், அத்தனை கீரைகளையுமே ‘மூலிகைகள்’ என்றுதான் வகைப்படுத்தியுள்ளனர். ‘உணவே மருந்து… மருந்தே உணவு’ என்ற கொள்கையுடன் வாழ்ந்த முன்னோர், பெரும்பான்மை உணவாக உட்கொண்டது, கீரைகளைத்தான். ஆடி மாதத் திருவிழாக்களில் அமோகமாக இடம்பெறும் கீரை, முருங்கைக் கீரை. இந்தக் கீரையில் பலவிதமான உணவுகளைச் செய்யலாம். அவற்றில் ஒன்று இந்த கீரை – அவல் உப்புமா.

**என்ன தேவை?**

முருங்கைக் கீரை – ஒரு கப்

சிவப்பு அவல் (கெட்டி அவல்) – ஒரு கப்

உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு – தலா 2 டீஸ்பூன்

எலுமிச்சைப்பழம் – அரை மூடி

கொத்தமல்லித் தழை – சிறிது

கறிவேப்பிலை – சிறிது

காய்ந்த மிளகாய் – 2

பெரிய வெங்காயம் – ஒன்று

கடுகு – ஒரு டீஸ்பூன்

வறுத்துத் தோல் நீக்கிய வேர்க்கடலை – ஒரு டேபிள் ஸ்பூன்

சீரகம் – ஒரு டீஸ்பூன்

தேங்காய்த் துருவல் – ஒரு டேபிள் ஸ்பூன்

எண்ணெய் – ஒரு டேபிள் ஸ்பூன்

உப்பு – தேவையான அளவு.

**எப்படிச் செய்வது?**

கீரையைச் சுத்தம் செய்து லேசாக தண்ணீர் தெளித்து குக்கரில் 2 விசில் வரும்வரை வேகவிட்டு எடுத்து வைக்கவும். வெங்காயத்தை நறுக்கி வைக்கவும். அவலை 20 நிமிடம் ஊறவைக்கவும்.

அடுப்பில் வாணலியை வைத்துச் சூடானதும் கடுகு, சீரகம், கறிவேப்பிலை, உளுத்தம்பருப்பு, கடலைப் பருப்பு சேர்த்து தாளிக்கவும். இத்துடன் காய்ந்த மிளகாயைக் கிள்ளிப்போட்டு வெங்காயம் சேர்த்து வதக்கவும். நறுக்கிய வெங்காயம் நிறம் மாறியதும், வேகவைத்த முருங்கைக் கீரையை அந்தத் தண்ணீருடனேயே சேர்த்து தேவையான அளவு உப்பு போட்டு தண்ணீர் சுண்டும் வரை வதக்கவும். ஊறிய அவலை தண்ணீரை வடித்துவிட்டு இதில் சேர்க்கவும். எல்லாவற்றையும் சேர்த்துப் புரட்டி மூடி போட்டு அடுப்பைக் குறைத்து ஐந்து நிமிடங்கள் வைக்கவும். பிறகு, வறுத்துத் தோல் நீக்கிய வேர்க்கடலையைச் சேர்த்து, எலுமிச்சைச் சாறு பிழிந்து, தேங்காய்த் துருவல் சேர்த்து, கொத்தமல்லித் தழை தூவி கிளறி இறக்கவும்.

குறிப்பு:

சிறுகீரை, முளைக்கீரை பயன்படுத்திச் செய்யும்போது வெங்காயத்துடன் வதக்கியே செய்யலாம். முருங்கைக் கீரை வேக நேரமாகும் என்பதால் குக்கரில் வேகவிட்டால் விரைவில் செய்யலாம்.

**என்ன பலன்?**

மனித உடல் வளர்ச்சிக்குத் தேவையான சத்துகளான புரதம், மாவுச்சத்து, கொழுப்புச் சத்து, சுண்ணாம்புச் சத்து, மணிச் சத்து, கந்தகச் சத்து, சாம்பல் சத்து ஆகியவற்றுடன்… உயிர்ச்சத்துகளான வைட்டமின் ஏ, வைட்டமின் பி1, பி2, பி 12, வைட்டமின் சி ஆகிய சத்துகளும் கீரைகளில் நிறைந்து கிடக்கின்றன. ரத்த சோகைக்கு முருங்கைக் கீரை நல்ல மருந்து.

[நேற்றைய ரெசிப்பி: மணத்தக்காளிக் கீரைத் துவையல்](https://minnambalam.com/k/2019/07/18/2)

**

மேலும் படிக்க

**

**[ அடிக்கப் பாய்ந்த சத்யா – அடக்கிய சேகர்பாபு: சட்டமன்ற காட்சிகள்!](https://minnambalam.com/k/2019/07/18/25)**

**[அத்திவரதர்: வரிச்சியூர் செல்வத்துக்கு பாஸ் கொடுத்தது யார்?](https://minnambalam.com/k/2019/07/18/54)**

**[டிஜிட்டல் திண்ணை: ரஜினி Vs ஸ்டாலின் -ஜோதிடர் மூட்டிய கலகம்!](https://minnambalam.com/k/2019/07/18/82)**

**[மாசெக்களுக்கு தெரியாமல் உதயநிதி நடத்தும் புது ஆபரேஷன்!](https://minnambalam.com/k/2019/07/18/45)**

**[மணிரத்னம் – நயன்: உருவாகும் வித்தியாசமான கூட்டணி!](https://minnambalam.com/k/2019/07/17/20)**

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share