dகிச்சன் கீர்த்தனா: அரைக்கீரை பக்கோடா

Published On:

| By Balaji

கீரைகள், வெறும் இலைகள் அல்ல… ஆரோக்கியம் அடைந்து கிடக்கும் தாவர அறைகள். அசைவ உணவுகளை விட அதிக சத்துகள் கீரைகளில் அடைந்து கிடக்கின்றன. கீரைகளை தினமும் உணவில் சேர்க்க வேண்டும் என்பதற்காகத்தான், ‘கீரை இல்லா அன்னம்… கூரையில்லா வீடு’ எனச் சொல்லி வைத்தனர் நம் முன்னோர். அப்படிப்பட்ட கீரைகளில் பலரால் பயன்படுத்தப்படுவது அரைக்கீரை.

**என்ன தேவை?**

அரைக்கீரை – ஒரு கட்டு

கடலை மாவு – 300 கிராம்

அரிசி மாவு – 100 கிராம்

வனஸ்பதி (டால்டா) – ஒரு டேபிள்ஸ்பூன்

பச்சை மிளகாய் – 2

மிளகாய்த்தூள் – அரை டீஸ்பூன்

சீரகத்தூள் – 2 சிட்டிகை

உப்பு – தேவையான அளவு

பெரிய வெங்காயம் – 2

கொத்தமல்லித் தழை – சிறிது

கறிவேப்பிலை – சிறிது

எண்ணெய் – தேவையான அளவு

சமையல் சோடா – ஒரு சிட்டிகை

**எப்படிச் செய்வது?**

கீரையைச் சுத்தம் செய்து தண்ணீரில் கழுவி பொடியாக நறுக்கி வைக்கவும். வெங்காயம், பச்சை மிளகாய், கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலையைப் பொடியாக நறுக்கி வைக்கவும். வனஸ்பதியை உருக்கிவைக்கவும். அகன்ற பாத்திரத்தில் கடலை மாவு மற்றும் அரிசி மாவைச் சேர்த்துப் பிசிறவும். இத்துடன் தேவையானவற்றில் கொடுத்துள்ள எண்ணெய் நீங்கலாக உள்ள மற்ற அனைத்துப் பொருட்களையும் சேர்த்து சிறிதளவு தண்ணீர் விட்டு கெட்டியாகப் பிசையவும்.

அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் சேர்த்துக் காய்ந்ததும், பிசைந்துவைத்துள்ள மாவை பக்கோடாக்களாக கிள்ளிப் போட்டுப் புரட்டிவிடவும். தீயை மிதமாக்கி பக்கோடாக்கள் பொன்னிறமாக, மொறுமொறுவென்று வந்ததும் எடுத்துப் பரிமாறவும்.

**என்ன பலன்?**

அரைக்கீரை… உடல் தளர்ச்சியைப் போக்கி ஊக்கமூட்டும். மலச்சிக்கலைப் போக்கும். குடலின் பலத்தை அதிகரிக்கும். பித்தத்தைக் குறைக்கும். இதில் உள்ள கால்சியம் மற்றும் இரும்புச் சத்து, சரும நோய்களைப் போக்கும்.

[நேற்றைய ரெசிப்பி: முருங்கைக் கீரை சூப்](https://minnambalam.com/k/2019/07/15/1)

**

மேலும் படிக்க

**

**[டிஜிட்டல் திண்ணை: உதயநிதியை மாசெக்கள் தேடி வரவேண்டும்- அறிவாலயத்தின் மெசேஜ் !](https://minnambalam.com/k/2019/07/15/72)**

**[அதிமுக தலைவராகிறாரா ரஜினி?](https://minnambalam.com/k/2019/07/15/18)**

**[திமுகவில் இணைந்த தேமுதிக மா.செ!](https://minnambalam.com/k/2019/07/14/48)**

**[அவசரப்பட்டுவிட்டேனோ? புலம்பிய தங்கம்](https://minnambalam.com/k/2019/07/13/18)**

**[ நியூசிலாந்துக்கு ‘விதி’ செய்த ‘சதி’!](https://minnambalam.com/k/2019/07/15/46)**

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share